'இப்படியே விட்டா சரி வராது...' 'யாரெல்லாம் உலக சினிமா பார்க்குறாங்கனு கண்டுபிடிச்சு...' 'உடனே அவங்கள...' - கடுமையான 'சட்டத்தை' பிறப்பித்த கிம் அரசு...!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாகவே திரைப்படம் என்பது உலகளாவிய பொழுதுபோக்குகளில் ஒன்று. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலக சினிமா முதல் உள்ளூர் திரைப்படம் வரையிலும், வெப் சீரிஸ், டாக்குமெண்ட்ரி என எல்லாமே கையளவில் பார்க்க முடியும்.
இம்மாதிரியான பல உலகத் திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்கள் பெரும்பாலும், சீனா எல்லை வழியே கடத்தி வரப்படும். இதன்மூலம் வடகொரிய மக்கள் வெளிநாட்டு திரைப்படங்களை கண்டு ரசித்து வந்தனர்.
இந்த சம்பவம் கிம் ஜாங் உன் அரசுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது. ஏனென்றால், வெளிநாட்டு படங்களை காண்பதால் மக்களிடம் உலகம் சார்ந்த புதிய பார்வைகள் எழுகிறது. எனவே ஜனநாயகம் சார்ந்து அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்க வாய்ப்புள்ளதாக ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதனால், வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
அதோடு இவ்வாறு வெளிநாட்டு படங்களை காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் சட்டம் வகுத்துள்ளது கிம் அரசு.
இந்நிலையில் சமீபத்தில், வடகொரிய அரசு, லீ என்ற இளைஞர் தென்கொரியா திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக 500 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதோடு, வெளிநாட்டு மொழி பேசுவோர், வெளிநாட்டவரை போல சிகை அலங்காரம் வைத்திருப்போர், வெளிநாட்டு ஆடைகளை அணிவோர் சமூக விஷமிகள் எனவும் கிம் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்