Naane Varuven M Logo Top

உலகத்திலேயே அதிக வயசு வாழ்ந்த நாய்க்கு நேர்ந்த சோகம்.. கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகில் அதிக வயது வாழ்ந்த நாயான பெப்பிள்ஸ், மரணமடைந்திருப்பதாக கின்னஸ் நிர்வாக அமைப்பு அறிவித்திருக்கிறது.

உலகத்திலேயே அதிக வயசு வாழ்ந்த நாய்க்கு நேர்ந்த சோகம்.. கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

Also Read | துர்கா பூஜை கொண்டாட்டத்தில் இருந்த பக்தர்கள்.. திடீர்னு ஆற்றில் ஏற்பட்ட மாற்றம்.. இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய வீடியோ..!

கின்னஸ் சாதனை

உலகிலேயே அதிக வயது வாழ்ந்த நாயாக கின்னஸ் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாய் பெப்பிள்ஸ். இதனை அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி கிரிகோரி தம்பதி வளர்த்து வந்தனர். இந்த நாய் கடந்த 3 ஆம் தேதி காலை 8.13 மணிக்கு உயிரிழந்ததாக கின்னஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் வயது 22 ஆண்டுகள் 50 நாட்கள் ஆகும்.

Pebbles the Fox Terrier the world oldest dog passes away

பெப்பிள்ஸ் இன்னும் 5 மாதங்களில் தனது 23 வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது. இந்நிலையில் அதன் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 28 மார்ச் 2000 அன்று அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள லாங் ஐலேண்டில் பெப்பிள்ஸ் பிறந்தது. உலகின் வயதான நாயாக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு பெப்பிள்ஸ் உலக அளவில் பிரபலமானது.

சோகம்

பெப்பிள்ஸ்-க்கு முன்னர் உலகின் வயதான நாயாக டோபிகீத் என்னும் நாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அப்போது, தங்களது நாய் பெப்பிள்ஸ் குறித்து கின்னஸ் அமைப்பிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர் பாபி மற்றும் ஜூலி கிரிகோரி தம்பதியர். அதன்பிறகு உலகின் வயதான நாயாக பெப்பிள்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பெப்பிள்ஸ்-ன் இறப்பு குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளனர் பாபி மற்றும் ஜூலி கிரிகோரி தம்பதியினர்.

Pebbles the Fox Terrier the world oldest dog passes away

பெப்பிள்ஸ் உடன் ராக்கி எனும் நாயையும் இந்த தம்பதியர் வளர்த்து வந்திருக்கின்றனர். இதுவரையில் 32 குட்டிகளை பெப்பிள்ஸ் ஈன்றெடுத்திருக்கிறது. இசையை விரும்பி கேட்கும் பெப்பிள்ஸ் தங்களுடைய வாழ்வின் மிகச்சிறந்த தோழியாக இருந்ததாக இந்த தம்பதியினர் உருக்கத்துடன் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர். பெப்பிள்ஸ் தங்களுக்கு கிடைத்தது வரம் போன்றது என குறிப்பிட்டுள்ள அவர்கள் அது பற்றிய நினைவு தங்களது வாழ்நாள் முழுவதும் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். வயது மூப்பு காரணமாக பெப்பிள்ஸ் உயிரிழந்திருப்பது உலகெங்கிலும் உள்ள நாய் பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | ஊருக்கே செல்லப்பிராணியாக மாறிய ஒரு காகம்.. இதுக்கெல்லாம் காரணம் அந்த சம்பவம் தான்.. சோக பின்னணி..!

OLDEST DOG, OLDEST DOG PASSES AWAY, GUINNESS RECORD, WORLD OLDEST LIVING DOG, PEBBLES THE FOX TERRIER

மற்ற செய்திகள்