200 ஊழியர்களின் ‘வேலை கட்’... 25 % வரை ‘சம்பளம் கட்’.. கொரோனாவின் தாண்டவத்தால் விமான நிறுவனங்கள் ‘அதிரடி!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகையே மிரட்டும் வார்த்தையாக உலகத்தில் அதிகமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தையாக மாறியுள்ளது ‘கொரோனா’.இந்த கொரோனா வைரஸ் என்பது இதுவரை சுகாதாரத்துறையின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கொரோனா என்னும் சூறாவளி உலகப் பொருளாதாரத்தில் கைவைத்துள்ளது.

200 ஊழியர்களின் ‘வேலை கட்’... 25 % வரை ‘சம்பளம் கட்’.. கொரோனாவின் தாண்டவத்தால் விமான நிறுவனங்கள் ‘அதிரடி!’

அதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தையை அது தன் கோரப்பிடியில் பிடித்து உலுக்கியுள்ளது. ஏற்கனவே உலக அளவில் சுற்றுலாத்தளங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், விமானசேவை நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி ஐடி நிறுவனங்கள் வரை தற்காலிகமாக மூடப்பட்டு வரும் நிலையில் எல்லா துறைகளிலும் அடி விழுந்துள்ளதாக நிபுணர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் 70% வெளிநாட்டு விமான பயணச் சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.  தவிர நிறுவனத்தின் செலவு முதலானவற்றை சமாளிப்பதற்காக ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிரடி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள இண்டிகோ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ரனோஜோய் தத்தா (Ronojoy Dutta) கொரோனா நிறுவனத்தின் பங்குகளில் இழப்பீடு வராமலிருக்க ஊழியர்களின் சம்பளம் 5 % முதல் 25% வரை குறைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதில் இண்டிகோவின் முதன்மை செயல் அதிகாரி  ரனோஜோய் தத்தாவுக்கு 25% சம்பளமும், மூத்த துணைத் தலைவருக்கு 20% சம்பளமும், விமானிகளுக்கு 15% சம்பளமும், மற்ற இண்டிகோ ஊழியர்கள், கேபிள் குழுக்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு சுமார் 5 முதல் 10 % வரையிலான சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் இதுபற்றி பேசிய, ‘ஒரு குடும்பத்துக்கு வரும் சம்பளத்தின் ஒரு பகுதி இழப்பு என்பது எவ்வளவு சிரமமானது என்பதை நாங்கள் அறிவோம். அதே சமயத்தில் துரதிஷ்டவசமாக ஊழியர்கள் இந்த தியாகங்களை செய்யாமல் இண்டிகோ நிறுவனத்தை தொடர்ந்து இந்த நெருக்கடியான பொருளாதார காலத்தில் நடத்துவது என்பது மிகவும் சிரமம்’ என்று  ரனோஜோய் தத்தா தெரிவித்துள்ளார்.

இதேபோல் கொரோனா காரணமாக, 83 நாடுகளின் 177 சர்வதேச விமான நிலையங்களில், 200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வரும் உலகின் மிகப் பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்றான  'கத்தார் ஏர்வேஸ்' நிறுவனம், அதன் பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் 200 பேரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்துள்ளது.

FLIGHT, PLANE, EMPLOYEE