LIGER Mobile Logo Top

திடீர்னு கேட்ட சத்தம்.. கடலுக்கடியே உள்ள சுரங்க பாதையில் சிக்கிய மக்கள்.. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் விவரமே தெரியவந்திருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து - பிரான்ஸ் இடையேயான சுரங்க பாதையில் சிக்கிக்கொண்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திடீர்னு கேட்ட சத்தம்.. கடலுக்கடியே உள்ள சுரங்க பாதையில் சிக்கிய மக்கள்.. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் விவரமே தெரியவந்திருக்கு..!

Also Read | "இப்படி ஒன்ன நாங்க பார்த்ததேயில்லை".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய வியாழனின் புகைப்படம்.. திகைச்சுப்போன ஆராய்ச்சியாளர்கள்.!

சுரங்க பாதை

பிரிட்டனையும் பிரான்சையும் இணைக்கிறது யூரோ டணல் எனும் சுரங்கப்பாதை. கடலுக்கடியே அமைந்திருக்கும் இந்த சுரங்க ரயில் பாதையை தினந்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சின் கலேஸ்-ல் இருந்து பிரிட்டனில் உள்ள ஃபோல்கெஸ்டோனுக்கு சென்ற ரயில் திடீரென நின்றிருக்கிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ரயில் பிரேக் டவுன் ஆகியிருப்பதால் பயணம் தாமதமாகலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர் அதிகாரிகள்.

Passengers Stranded In Tunnel Beneath English Channel

நடைபாதை

இருப்பினும், சற்று நேரத்தில் பயணிகள் சுரங்க பாதையில் இருக்கும் நடைபாதை வழியாக சென்று அடுத்த ரயில் முனையத்தை அடையுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் தங்களது உடமையுடன் பாதை வழியாக நடக்க துவங்கினர். இதுகுறித்து பேசிய பயணி ஒருவர்,"எங்களிடம் 3 வெவ்வேறு விதமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. முதலில் ரயில் பழுதடைந்தது எனவும் பின்னர் பயணிகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காரும் ஆம்புலன்சும் நேருக்குநேர் மோதிவிட்டது எனவும் சொல்லப்பட்டது. இதனால் நான்கு மணி நேரத்துக்கு அதிகமாக நாங்கள் காத்திருந்தோம்" என்றார்.

Passengers Stranded In Tunnel Beneath English Channel

பர்மிங்காமைச் சேர்ந்தவரான சாரா ஃபெலோஸ்," அந்த தருணம் பயங்கர திரைப்படம் போல இருந்தது. கடலுக்கடியே இருக்கும் சுரங்க பாதையில் நடப்பது திகிலூட்டுவதாக இருந்தது. அதில் ஒருபெண் அழுதுகொண்டிருந்தார். மற்றொருவர் பீதியுடன் காணப்பட்டார். அந்த குழிக்குள் நாங்கள் சுமார் 5 மணி நேரங்களை செலவிட வேண்டியிருந்தது" என்றார்.

பழுது

இதுபற்றி பேசிய சுரங்க பாதையின் செய்தித் தொடர்பாளர்,"ரயில் பழுதடைந்த உடனே அதில் பயணம் செய்த மக்களை, சர்வீஸ் பாதைகள் வழியாக வெளியே கொண்டுவர முயற்சித்தோம். இதுபோன்ற நேரங்களில் பயன்படுத்தப்படவே இந்த பாதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் இந்த பாதையின் வழியாக உணவு மற்றும் பானங்கள் கிடைக்கும் இடத்தினை அடையலாம். அதன்பிறகு மாற்று ரயில் மூலமாக மக்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். தற்போது போக்குவரத்து சீராக உள்ளது" என்றார்.

Passengers Stranded In Tunnel Beneath English Channel

இதனிடையே சுரங்க பாதைகள் வழியே மக்கள் நடந்துசெல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | அக்கா கூட வந்த போட்டி.. குட்டி Flight-அ எடுத்துக்கிட்டு கிளம்புன சிறுவன் செஞ்ச 2 உலக சாதனை.. கின்னஸ் நிர்வாகமே மிரண்டு போய்டுச்சு..!

TUNNEL, PASSENGERS, PASSENGERS STRANDED IN TUNNEL, TRAIN PASSENGERS STRUCK

மற்ற செய்திகள்