"இப்போ எப்படி வந்து தாக்குதுன்னு பாக்குறேன்..." "கொரோனான்னா என்ன பெரிய கொம்பா.... யாருகிட்ட... " பாதுகாப்புக்காக 'விமானப்பயணிகள்' செய்த 'விநோத' செயல்... 'வைரல் வீடியோ...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பீதியால் விமான பயணிகள் தங்களை முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

"இப்போ எப்படி வந்து தாக்குதுன்னு பாக்குறேன்..." "கொரோனான்னா என்ன பெரிய கொம்பா.... யாருகிட்ட... " பாதுகாப்புக்காக 'விமானப்பயணிகள்' செய்த 'விநோத' செயல்... 'வைரல் வீடியோ...

கொரோனா வைரஸ் பீதியால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் முகக் கவசம் அணிந்தபடி வெளியில் பயணித்து வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் விமானப் பயணிகள் இருவர் பாதுகாப்புக்காக செய்த செயல் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

அந்த பயணிகள் இருவரும் தங்களது உடல் முழுவதும் பிளாஸ்டிக்கால் மூடிக் கொண்டு ஒரு பொம்மை போல் உட்கார்ந்திருந்தனர். அதில் பெண் பயணி ஒருவர் ‘பிங்க்’ நிற பிளாஸ்டிக் உடையை கை, கால், உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரது அருகில் ஆண் பயணி ஒருவர் தன்னுடைய உடல் முழுவதும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

இதனைக் கண்ட விமானப் பயணிகள் சற்று வியப்படைந்தனர். பாதுகாப்பு உணர்வு இருக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா  உடல் முழுவதும் பிளாஸ்டிக்கால் போர்த்திக் கொள்வது என பயணிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், அந்த பயணிகளின் நடவடிக்கைக்கு ஆதரவாக சிலர் கருத்து பதிவிடுகின்றனர். சிலர் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

AUSTRALIA, FLIGHT PASSANGERS, COVERED, PLASTIC, CORONA, VIRUS