கடலுக்கு மேல பறந்தப்போ மயங்கிய பைலட்.. கலவரமான கண்ட்ரோல் ரூம்.. சூப்பர் ஹீரோவாக மாறுன பயணி.. ஹிஸ்டரியிலயே இப்படி நடந்தது இல்லயாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் நடுவானில் விமானி மயக்கமடைந்த நிலையில் பயணி ஒருவர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கடலுக்கு மேல பறந்தப்போ மயங்கிய பைலட்.. கலவரமான கண்ட்ரோல் ரூம்.. சூப்பர் ஹீரோவாக மாறுன பயணி.. ஹிஸ்டரியிலயே இப்படி நடந்தது இல்லயாம்..!

Also Read | 28 மனைவிகள், 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37-வது திருமணம் செய்துகொண்ட தாத்தா.. யாரு சாமி இவரு? மீண்டும் வைரலாகும் வீடியோ..!

மயங்கிய விமானி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது பாம் பீச் சர்வதேச விமான நிலையம். இந்த  நிலையத்தில் நேற்று வினோதமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. 14 பேர் அமரக்கூடிய Cessna ரக விமானம் ஒன்று கடலின் மேலே பறந்துகொண்டிருந்த வேளையில் திடீரென விமானி மயக்கமடைந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணி ஒருவரே விமானத்தை பத்திரமாக ஓட்டிச்சென்று இந்த விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

இந்த பயணிக்கு விமானத்தை இயக்குவது குறித்து எதுவும் தெரியாத நிலையில், சக பயணி ஒருவரின் துணையுடன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் கட்டளையின்படி விமானத்தை சரியாக தரையிறக்கியுள்ளார் இவர்.

Passenger with no flying experience safely lands plane

கலவரமாக கண்ட்ரோல் ரூம்

புளோரிடா விமான நிலையத்திற்கு 70 மைல் தொலைவில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அதில்,"விமானி மயக்கமடைந்துவிட்டார். இப்போது என்ன செய்வது" என படபடப்புடன் பயணி ஒருவர் பேசியிருக்கிறார். இதனைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

பின்னர் உடனே சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து பேசுகையில், கடற்கரையை பின்பற்றி விமானத்தை எப்படி இயக்குவது என்பதை விளக்கத் துவங்கினர். அப்போது "விமானத்தை இயக்குவது குறித்து தனக்கு ஏதும் தெரியாது" என அந்த பயணி தெரிவித்திருக்கிறார்.

Passenger with no flying experience safely lands plane

தரையிறக்கம்

இதனை தொடர்ந்து விமான இயக்கம் குறித்து அந்த பயணிக்கு விளக்க, அவரும் அதன்படியே செயல்பட்டிருக்கிறார். இதனிடையே கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் விமானத்தை கண்காணித்தபோது 25 மைல் தூரத்தில் விமானம் வந்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் பின்னர், விமான நிலையத்தில் எப்படி விமானத்தை தரையிறக்குவது? என்பதை படிப்படியாக அதிகாரிகள் சொல்ல, அந்த பயணியும் அச்சு பிசறாமல் அதனை மேற்கொண்டுள்ளார். இதன் பலனாக வெற்றிகரமாக விமானம் தரையிறங்கியுள்ளது.

இதுபற்றி பேசிய விமான இயக்க நிபுணர் ஜான் நான்ஸ்," விமான இயக்கம் குறித்து எதுவுமே தெரியாத ஒரு நபர் இத்தகைய Cessna ரக விமானத்தை ஓட்டிவந்து தரையிறக்கியது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

Passenger with no flying experience safely lands plane

அமெரிக்காவில் விமானி மயக்கமடைந்த நிலையில், பயணி ஒருவரே விமானத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

PASSENGER, FLIGHT, PILOT, LANDS PLANE, விமான பைலட்

மற்ற செய்திகள்