"கடல் அரக்கன் அது".. திமிங்கிலங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ராட்சத உயிரினம்.. மிரண்டுபோன ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போது உள்ள திமிங்கிலங்களுக்கு முன்னோடியான பிரம்மாண்ட கடல் உயிரினம் ஒன்றின் மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
முன்னோடி
பெரு நாட்டில் உள்ள ஒரு பகுதியில், பிரம்மாண்ட கடல் உயிரினம் ஒன்றின் மண்டை ஓட்டினை கண்டுபிடித்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கடந்த வியாழக் கிழமை அன்று அறிவித்தனர். தற்போது உள்ள திமிங்கிலங்களுக்கு எல்லாம் முன்னோடியான இந்த உயிரினம் பிரம்மாண்ட அளவில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
36 மில்லியன் வருடங்கள்
பெரு நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்து உள்ளது, ஒக்குகேஜே பாலைவனம். இங்கே நடைபெற்ற ஆராய்ச்சியில் தான் இந்த கடல் உயிரினத்தின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாறைகளுக்கு இடையே இருந்த இந்த மண்டை ஓட்டினை கொண்ட உயிரினம் 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரினம் பண்டைய காலத்தில் வாழ்ந்த பாலூட்டியான 'பாசிலோசொரஸ்' என்னும் விலங்காக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியார்கள். நீர்வாழ் செட்டேசியன் குடும்பத்தின் ஒரு பகுதியான இந்த விலங்குகள் ஒரு காலத்தில் பிரம்மாண்ட மற்றும் ஆக்ரோஷமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது உள்ள திமிங்கிலங்கள், டால்பின்கள் மற்றும் போர்போயிஸ்கள் ஆகியவற்றுக்கு இந்த விலங்கு முன்னோடியாகும்.
ராட்சத பாம்பு
பாசிலோசொரஸ் என்ற வார்த்தைக்கு 'ஊர்வனவற்றின் அரசன்' என்று பொருள்படும். ஆனால், இந்த விலங்குகள் ஊர்வன வகையை சேர்ந்தவை அல்ல. 'ராட்சத பாம்புபோல இருந்த இந்த விலங்குகள் ஊர்வன அல்ல' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
39 அடி நீளம் கொண்ட இந்த விலங்குகள், தங்களது இரையை கடுமையாக தாக்கும் குணம் கொண்டவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். செட்டேசியன் பிரிவை சேர்ந்த பாலூட்டிகள் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்ததாகவும் விண்கல் மோதியதன் காரணமாக அவை அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டின் யுகடன் தீபகற்ப பகுதியில், 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று வந்து விழுந்திருக்கிறது. இதனால், அப்போது புவியில் வசித்து வந்த டைனோசர் உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிந்துபோனது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்