மண்ணிலே ஈரம் உண்டு.. பலூன் விற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்.. பெண் கொடுத்த சர்ப்ரைஸ்.. இதயங்களை வென்ற வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்சாலையில் பலூன் விற்பனை செய்துவந்த இளைஞருக்கு பெண் ஒருவர் உணவு மற்றும் பணத்தை அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | சமோசா விற்பனையில் தினமும் 12 லட்சம் வருமானம்..! சொந்த வீட்டை விற்று கனவை நிறைவேற்றிய பட்டதாரி தம்பதி..!
இணையம்
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக எளியவர்களின் ஆசைகள் கைகூடும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் சாலையில் பலூன் விற்பனை செய்துவந்த இளைஞருக்கு பெண் ஒருவர் உணவு மற்றும் பரிசுகளை அளிக்கும் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
சர்ப்ரைஸ்
இந்நிலையில் ஃபைஸா நயீம் எனும் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையோரம் இளைஞர் ஒருவர் பலூன்களை விற்பனை செய்து வருகிறார். அவரை கண்டதும் காரை நிறுத்திய நயீம் அவரிடத்தில் பிரியாணி பார்சலை கொடுக்கிறார். இதனை கண்டு ஆச்சர்யமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய பெயர் கிரிஷ் எனவும் தான் ஒரு பலூனை 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
வீடியோ
இதனையடுத்து அவரிடம் இருந்த அனைத்து பலூன்களையும் நயீம் பெற்றுக்கொள்கிறார். அதற்க்கு பணம் கொடுக்க பெண்மணி முயற்சிக்க, தான் இலவசமாக கொடுக்க விருப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறார் அந்த இளைஞர். அப்போது கண்டிப்பாக பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பெண்மணி கூறியிருக்கிறார். இதனையடுத்து தன்னுடைய பர்சில் இருந்து கூடுதலாக பணத்தை எடுத்து அந்த இளைஞருக்கு கொடுக்கிறார் நயீம். இதனால் சந்தோஷமடைந்த அவர் பெண்மணியின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு தனது நன்றியை வெளிப்படுத்துகிறார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,"வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" என நயீம் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, கிரிஷை உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு ஐஸ் கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்களை நயீம் வாங்கிக்கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Also Read | செய்யாத குற்றத்துக்கு தண்டனை.. 34 வருஷத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட நபர்.. பகீர் பின்னணி..!
மற்ற செய்திகள்