'பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து...' 'வீடுகளின் மேல் விழுந்துருக்கு...' 107 பேர் இருந்துருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் நிலை தடுமாறி மக்கள் வசிக்கும் வீடுகளின் கூரையின் மேல் விழுந்து நொறுங்கியதில் பல உயிர் சேதம் நிகழ்ந்திருக்கும் என தெரியவருகிறது.

'பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து...' 'வீடுகளின் மேல் விழுந்துருக்கு...' 107 பேர் இருந்துருக்காங்க...!

பாகிஸ்தானில் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட இந்த விமானத்தில் சுமார் 107 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் பயணிகளில் பலர் இந்த விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் விமானம் மோதிய வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

வானிலிருந்து விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

மற்ற செய்திகள்