VIDEO: எருமை மாட்டிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி...! 'கேட்ட உடனே எருமை மாடு கொடுத்த அல்டிமேட் ரியாக்சன்...' - டிரென்ட் ஆகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானை சேர்ந்த செய்தி சேகரிப்பாளர் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: எருமை மாட்டிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி...! 'கேட்ட உடனே எருமை மாடு கொடுத்த அல்டிமேட் ரியாக்சன்...' - டிரென்ட் ஆகும் வீடியோ...!

வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை வழங்குவதில் பெயர் போனவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமின் ஹபீஸ்.

இவர் பக்ரீத் பண்டிகையையொட்டி செய்தி சேகரிக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்றுள்ளார். அப்போது அமின் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த எருமை மாட்டிடம் கேள்வி கேட்டு பதிலும் வாங்கியுள்ளார்.

பத்திரிகையாளர் அமின் ஹபீஸ் அந்த எருமை மாட்டிடம், 'இப்போது லாகூரின் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?, லாகூரில் என்ன உணவை உண்டீர்கள்?, எது உங்களுக்கு பிடித்தமானது' போன்ற கேள்விகளை கேட்டுள்ளார்.

அந்நேரத்தில் அந்த மாடும் வாயை துறந்து கத்தியுள்ளது. இது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்