அந்த 13வது ஆள் யாரு? இம்ரான் கானின் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய ஒற்றை புகைப்படம்.? முழு தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில் நீடிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் பழைய புகைப்படம் ஒன்று அவருடைய ஆட்சிக்கு தலைவலியாக மாறியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Virat Kohli : கேட்சை பிடிச்சுட்டு வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்த கோலி.. வைரலாகும் Pic..!
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு பெரும்பான்மை குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை ஆகியவை இம்ரான்கான் ஆட்சியின் மீது குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டாலும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இம்ரான் கானுக்குமிடையே நடைபெற்றுவரும் கருத்து வேறுபாடு தான் இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது.
வைரல் புகைப்படம்
இந்நிலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சமீபத்தில் போலியோ விழிப்புணர்வுக்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது பில் கேட்ஸ் உடன் இம்ரான்கான் சந்தித்த பழைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மொத்தம் 12 பேர் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். இம்ரான் கானுக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தவரின் உருவம் கணினி மூலமாக மறைக்கப்பட்டுள்ளது. அது யாருடைய புகைப்படம்? அங்கே இருந்தது யார்? என்ற குழப்பம் சமூக வலைதள வாசிகள் இடையே எழுந்தது.
முற்றுப்புள்ளி
இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தில் இருப்பது பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் நதீம் அஞ்சும் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்ரான் கான் உடன் இருக்கும் புகைப்படத்தில் தன்னை ப்ளர் செய்யுமாறு நதீம் குறிப்பிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் வெளி உலகிற்கு தெரியவந்திருப்பதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
பாகிஸ்தான் உளவுத் துறை தலைவராக நதீம் அஞ்சும்-ஐ நியமிக்க ஆரம்பத்தில் மறுத்துவந்த இம்ரான், அதன்பின்னர் ராணுவ ஜெனரல் ஜாவித் பாஜ்வே அளித்த வலியுறுத்தலின் பேரில் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்