'கொரோனா பரிசோதனை செய்துகொண்டு'... 'முடிவு வருவதற்கு முன்பே'... 'தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசிய, அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்lதையடுத்து, இம்ரான் கானும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் 'தி எத்தி' என்ற பிரபல அறக்கட்டளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த அறக்கட்டளையின் சார்பில், அந்நிறுவனத்தின் தலைவரின் மகன் பைசல் எத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நேரில் சந்தித்து கடந்த வாரம் ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பைசலுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பைசலை சந்தித்து பேசிய இம்ரான் கானுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில், கொரோனா தொற்று உள்ள நபரிடம் மூடிய அறையில் 15 நிமிடங்கள் பேசினாலோ, 6 அடிக்கு குறைவான இடைவெளியில் இருந்தாலோ அவர்கள் தொடர்பாளர்களாக கருதப்படுகின்றனர். இம்ரான் கான் ஆறடிக்கும் குறைவான இடைவெளியிலேயே பைசலுடன், சில நிமிடங்கள் பேசியுள்ளார்.
அவர்கள் கைகுலுக்கவில்லை, ஆனாலும் பைசல் தந்த காசோலையை இம்ரான் கான் வாங்கியதால், காசோலை மூலம் வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுவதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இன்றிரவு தெரியவரும். அதற்குள் தன்னைத்தானே இம்ரான்கான் தனிமைப்படுத்தி கொண்டார். பாகிஸ்தானில் மொத்தம் 9 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 209 பேர் உயிரிழந்துள்ளனர்.