பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ‘ஆண்மை நீக்கம்’ தண்டனை.. அதிர வைத்த நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ‘ஆண்மை நீக்கம்’ தண்டனை.. அதிர வைத்த நாடு..!

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதில் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

Pakistan PM approves chemical castration law for rapists, Report

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான்கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Pakistan PM approves chemical castration law for rapists, Report

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Pakistan PM approves chemical castration law for rapists, Report

காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில அமைச்சர்கள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறியுள்ளார்.

News Credits: Geo TV, NDTV

மற்ற செய்திகள்