'இப்படி பேசிக்கிட்டே இருந்தா'... 'லைவ் ஷோ'வில் அத்துமீறிய பிரபலம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்வுகளில் காரசாரமான வார்த்தை போர்கள் நடப்பது உண்டு. ஆனால் அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், நேரலையில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பாக் நியூஸ் நெட்வொர்க் என்னும் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் விவாத நிகழ்ச்சிகளில் கட்சி சார்பாகப் பேச வரும் நபர்கள் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். இது போன்ற பல நிகழ்வுகள் இந்த செய்தி நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான மஸ்ரூர் அலி சியால் கலந்துகொண்டார். காரசாரமாக நடந்த விவாதத்தின்போது டென்ஷன் ஆன அவர் காட்டமாகப் பதிலளித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், நடுவில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் இம்டிஸ் கான் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார். பத்திரிகையாளரை கீழே தள்ளிவிட்ட மஸ்ரூர் அலி, அவரை கடுமையாக தாக்கினார். உடனடியாக அங்கிருந்த நெறியாளர் மற்றும், டிவி ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.