‘வாய் தவறி அப்படி சொல்லிட்டார்’!.. சர்ச்சையை கிளப்பிய இம்ரான் கான் சொன்ன விஷயம்.. ஒரு வருசம் கழிச்சு பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மறைந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி எனக் கூறிய சர்ச்சைக்கு அந்நாட்டு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதிக்கு வந்த அமெரிக்க ராணுவத்தினர், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்’ என்று பேசியிருந்தார். இம்ரான் கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தற்போது இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், ‘பிரதமர் இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவம், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தியது. ஒசாமா பின்லேடன் அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்கு தெரியாது என்று பாகிஸ்தான் அப்போது திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்