ஒரு sandwich-காக பெயிண்டிங்கை கொடுத்த ஓவியர்.. ஏலத்துல நடந்த அதிசயம்.. ஹோட்டல் ஓனருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் சான்டவிச்-காக அரிய ஓவியத்தை ஒருவர் ஹோட்டலில் கொடுத்திருக்கிறார். அந்த ஓவியம் தற்போது ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு sandwich-காக பெயிண்டிங்கை கொடுத்த ஓவியர்.. ஏலத்துல நடந்த அதிசயம்.. ஹோட்டல் ஓனருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..!

மட் லூயிஸ்

கனடாவின் நோவா ஸ்கோட்டியா என்னும் பகுதியில் 1903 ஆம் ஆண்டு பிறந்தவர் லூயிஸ். இயல்பிலேயே அவருக்கு ஓவியத்தின்மீது பற்று இருந்தது. குறிப்பாக, பழங்கால விஷயங்களை வரைவது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. லூயிஸ் தனது வாழ்நாள் முழுவதும் நோவா ஸ்கோட்டியா பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு தனது ஓவியங்களை விற்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பம் நடத்திவந்தார். வருமானம் மிகவும் சொற்பம். ஆகவே கிட்டத்தட்ட அந்திம காலம் வரையிலும் லூயில் வறுமையிலேயே வாழ்ந்தார்.

Painting exchanged for sandwich sold at auction 2 crore

அவர் உயிருடன் இருந்த வேளையில் அவருடைய ஓவியங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் இறந்த பிறகு, அவரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியானது. அதன்பின்னரே லூயிஸின் புகழ் உலகம் எங்கிலும் பரவியது. அவருடைய ஓவியங்கள் உலக நிறுவனங்களால் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

சாண்ட்விச்

இதனிடையே பிளாக் ட்ரக் எனப்படும் மட் லூயிஸின் அரிய ஓவியம் ஒன்று ஜான் கின்னர் என்ற கலைஞருக்கு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னால் கிடைத்த இந்த ஓவியத்தை ஜான் ஒருமுறை சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் உரிமையாளரிடம் கொடுத்திருக்கிறார். ஐரீன் டெமாஸ் என்ற பெண்மணி தனது கணவர் டோனியுடன் இணைந்து இந்த ஹோட்டலை இன்றும் நடத்திவருகிறார்.

Painting exchanged for sandwich sold at auction 2 crore

இதுபற்றி அவர் பேசுகையில்,"ஜான் எங்களுடைய உணவகத்திற்கு நாள்தோறும் வருவார். ஆனால், தினமும் சீஸ் சாண்ட்விச் மட்டுமே சாப்பிடுவார். வேறு எதையும் வாங்க மாட்டார். அன்றைய நாள், இந்த ஓவியத்தை கொடுத்துவிட்டு சாண்ட்விச் வாங்கிக்கொண்டு போனார்" என்றார்.

ஏலம்

இந்நிலையில், ஐரீன் தான் வைத்திருந்த ஓவியத்தை ஏலத்தில் விட முடிவெடுத்திருக்கிறார். இதனையடுத்து ஏல நிறுவனத்திடம் வந்த ஓவியம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 2 கோடி ரூபாய்க்கு இந்த ஓவியம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஐரீன் மற்றும் அவரது கணவர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Painting exchanged for sandwich sold at auction 2 crore

சாண்ட்விச்-காக விற்கப்பட்ட ஓவியம் ஒன்று 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போன சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

MAUDLEWIS, PAINTING, AUCTION, மட்லூயிஸ், சாண்ட்விச், ஏலம்

மற்ற செய்திகள்