இந்த கொரோனா தடுப்பூசியில அப்படி என்ன தான் ஸ்பெஷல்...? 'ஒண்ணு இல்ல, ரெண்டு விஷயம் இருக்கு...' - ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தற்போது சோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து மற்ற நாடுகள் உருவாக்கும் தடுப்பு மருந்துகளை காட்டிலும் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசியில அப்படி என்ன தான் ஸ்பெஷல்...? 'ஒண்ணு இல்ல, ரெண்டு விஷயம் இருக்கு...' - ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அறிவிப்பு...!

கடந்த ஜனவரி மாதம் முதல் உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 7 மாதங்களை கடந்தும் இன்னும் ஆட்டம் காட்டி வருகிறது. மேலும் பரிசோதனை நிலையில் இருக்கும் தடுப்பு மருந்துகளும்   எப்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கிறது.

கொரோனோவால் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தற்போது உருவாக்கி வரும் தடுப்பு மருத்து மற்ற நாடுகள் கண்டுபிடிக்கும் தடுப்பு மருந்துகளை காட்டிலும் கூடுதல் பயன் தரும் என ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கூறியுள்ளது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி மற்றும் மருந்துகள் பரிசோதனைகளில் இருந்தாலும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தயாரிக்கும் இந்த  கொரோனா தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி டெய்லி டெலிகிராப்' என்ற பிரிட்டன் பத்திரிகையில் 'மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும்  ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது; இரண்டாவதாக மனித உடலில் வைரசை உருவாக்கும் 'செல்'களை அழிக்கும். 'கில்லர் டி செல்' என்ற செல்லும் இதில் உள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை செலுத்தும் நபருக்கு ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி செல் என்பது அவரது உடலில் பல ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும் என்பது மிகவும் சாதகமான அம்சம். ஆனால் இன்னும் அதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இருக்கும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டன் அரசின் உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஜென்னர் பயிற்சி மையம் அஸ்டரா ஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்க அனுமதி அளித்த ஆராய்ச்சி நெறிமுறை குழு தலைவர் டேவிட் கார்பென்டர் கூறியதாவது, நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இந்த தடுப்பூசி எப்போது தயாராகும் என்பதை உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் ஆராய்ச்சியின் முடிவுகள் தவறாக கூட போகலாம். மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் வரும் செப்டம்பரில் இந்த ஊசி பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது'' என்றார்.

மற்ற செய்திகள்