'காரை ஸ்டார்ட் பண்ணுனது தான் மிச்சம்'... 'கர கரன்னு வந்த வித்தியாசமான சத்தம்'... இன்ஜின் பேனட்டை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்!
முகப்பு > செய்திகள் > உலகம்காரை பெண் ஸ்டார்ட் செய்த போது ஒரு விசித்திரமான சத்தம் வந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணுக்கு அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.
காடுகள் அழிப்பு என்பது உலகம் முழுவதும் பல நாடுகளில் தொடர்கதையாகி வருகிறது. மனிதன் தனது சுயலாபத்திற்காகக் காடுகளை அழித்தால் அது மனிதனுக்குத் தான் பேராபத்தாக முடிவும். அந்த வகையில் யானைகள் ஊருக்குள் வந்து மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களைப் பார்த்தாலே தெரியும். தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது காரை எடின்பார்க் என்ற ஏரிக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லலாம் என காரை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது காருக்குள் இருந்து ஒரு விசித்திரமான சத்தம் வந்துள்ளது. முதலில் அந்த பெண்ணுக்கு அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. இதனால் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளார்.
ஆனாலும் அதே சத்தம் மீண்டும் வந்துள்ளது. இதனால் காரின் இன்ஜினில் ஏதாவது பாதிப்பு இருக்குமோ என்ற யோசனையில் கார் இன்ஜினின் பேனட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்குப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த காரின் இன்ஜினுக்கு உள்ளே நீர் நாய் ஒன்று இருந்துள்ளது. உடனே இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் நீர் நாயைப் பத்திரமாக வெளியே எடுத்தார்கள். அப்போது அது மிகவும் பயந்து போய் இருந்தது. ஆனால் அந்த நீர் நாய்க்கு எந்த சிகிச்சையும் தேவைப்படவில்லை என அந்த பெண் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்