'தந்தையின் இறப்புக்கு பழிவாங்கும் திட்டமா?'.. பின்லேடன் மகன் இறப்பு பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல், உலகத்தையே அதிர வைத்தது. அதன் பின் வெளிச்சத்துக்கு வந்தவர்தான், ஒசாமா பின்லேடன். அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான இவரை கடந்த 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இறங்கி அமெரிக்கா சுட்டுக் கொன்றது.

'தந்தையின் இறப்புக்கு பழிவாங்கும் திட்டமா?'.. பின்லேடன் மகன் இறப்பு பின்னணி என்ன?

அப்போது ஒசாமின் ஒரு மகனான காலித் கொல்லப்பட்டார். இன்னொரு மகனான, ஹம்ஸா தப்பியதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அதன் பின் அவரை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே 30 வயதான ஹம்ஸா அல்-கொய்தாவை இயக்கி வந்ததாகவும், தனது தந்தை மற்றும் சகோதரருக்கு பழி தீர்க்கும் வகையில், இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை எப்படி நம்புவது என அந்நாட்டு அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டது.

இதுபற்றி டிரம்ப்பிடம் கேட்டபோதும், உளவுத்துறையிடம் கேட்டபோதும், அவர்கள் பதில் சொல்ல மறுத்துள்ளனர்.  ஆகையால் அமெரிக்க அரசு, ஹம்ஸாவின் இறப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான விளக்கத்தத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HAMZABINLADEN, BINLADEN, ALQAEDA