உண்மையாவே 'அந்த சம்பவத்த' செஞ்சது 'பின் லேடன்' தானா...? - '20 வருஷம்' கழிச்சு தாலிபான்கள் தெரிவித்துள்ள 'ஷாக்' தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில், தாலிபான் அமைப்பு மீண்டும் இந்த பிரச்சனையை கிளறியுள்ளது. ஆப்கானில் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அமெரிக்க ராணுவ படைகளை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா முதலில் ஆப்கானிஸ்தானில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் கொண்டு தகர்க்க முக்கிய புள்ளியாக விளங்கியவர் ஒசாமா பின்லேடன் என அமெரிக்கா கூறியது.
மேலும், அந்த நேரத்தில் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்தார். அவரை கொல்வதற்காகவே அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானில் நுழைந்தது.
இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லையென தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'அமெரிக்கர்களுக்கு பின் லேடன் அச்சுறுத்தலாக கருதப்பட்டபோது அவர் ஆப்கனில்தான் இருந்தார். உண்மையை சொல்லப்போனால் ஒசாமாவிற்கும் ஆப்கானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆப்கான் மண்ணும் எவர் ஒருவருக்கும் எதிரியாக செயல்படவில்லை' எனக் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், பெண்களின் உரிமைகள் குறித்த கேள்விக்கு, 'தாலிபான்கள் பெண்களை எங்களின் சகோதரிகளாக மதிக்கின்றோம். இனி அவர்கள் பயப்படக்கூடாது. நாங்கள் தேசத்திற்காக போராடியுள்ளோம். அவர்கள் இதை நினைத்து பெருமைப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்