'கொரோனா' மரண பாதிப்புகளை அறிவிக்க.. 'கோமாளி' வேஷம் அணிந்து 'தோன்றிய' சுகாதார 'அதிகாரி!'.. ‘பாராட்ட வைக்கும் காரணம்!’.. ஆனாலும் வலுக்கும் கண்டனங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்புள்ள நாடுகள், தங்கள் நாட்டின் கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தினமும் அறிவிப்பது வழக்கம்.
அப்படித்தான் அமெரிக்காவின் ஓரிகான் மாகாண சுகாதார அதிகாரி கொரோனா பாதிப்புகளை ஊடகங்கள் முன்னிலையில், பொதுமக்களுக்கு அறிவிக்கும்போது, வித்தியாசமான முறையில் கோமாளி போல் வேடமணிந்து அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘ஓரிகானில் மொத்தமாக 38 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் வேதனை தருவதாக உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். இதனை பேசி முடிந்தது, உடனே அவர் முகக்கவசத்தை எடுத்து மாட்டிக் கொள்கிறார். ஆனால் உண்மையில், கொரோனா பாதிப்புக்கு மத்தியில், மக்கள் எத்தனை விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் ஹாலோவீன் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்கிற அறிவுறுத்தலுக்காக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம், கொரோனா அறிவிப்பை வெளியிடும்போது, இவ்வாறு கோமாளி வேஷத்தின் அவசியம் என்ன என்றும், இது மிகவும் மோசமான செயல் என்றும் பலர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்