"அது என்னய்யா அது ஒரு வார்த்த ட்வீட்?".. ட்விட்டரில் படையெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் ட்வீட்கள்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்அடிக்கடி இணையத்தில் ஏதாவது புது புது விஷயங்கள் ட்ரெண்ட் ஆகிக் கொண்டே இருக்கும். ஏதாவது பாடலில் வரும் ஸ்டெப்கள் வைரலானதும், அதையே அனைவரும் பின்பற்றி ஆடி வீடியோவாக வெளியிடுவது என வைரலாகி கொண்டே இருக்கும்.
Also Read | ஆசிய கோப்பை 2022 : இந்திய அணிக்கு உருவான பெரிய சிக்கல்.. "இந்த மாதிரி ஒரு நேரத்துல தான் இப்டி நடக்கணுமா??"
உதாரணத்திற்கு Kiki சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், டல்கோனா காஃபி சேலஞ்ச் என பல விஷயங்கள் ஒரு காலத்தில் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது.
ஒருவர் இதனை ஆரம்பித்து வைக்கும் நிலையில், அதனை பின்பற்றி பலரும் அப்படியே செய்வார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைத்தளங்களை திறந்தாலும் இப்படி ட்ரெண்டிங் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் இருப்பதை நாம் நிறைய காண முடியும்.
அந்த வகையில், ட்விட்டரில் தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் விஷயம், நெட்டிசன்கள் பலரது மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு பிரபல ரெயில்வே நிறுவனம், ஆரம்பத்தில் ஒரு வார்த்தையில் ட்வீட் ஒன்று செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பின்பற்றி, பிரபல சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றும் ஒரு வார்த்தையில் ட்வீட் ஒன்றை பகிர, இணையவாசிகள் மத்தியில் இந்த ஒரு வார்த்தை ட்வீட் வைரலாக தொடங்கியது.
அது மட்டுமில்லாமல், பிரபலங்கள் பலரும் இந்த ஒரு வார்த்தை ட்வீட்டை பயன்படுத்தி சில பதிவுகளை பகிர்ந்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் (Democracy) என ட்வீட் செய்திருந்தார். அதே போல, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'கிரிக்கெட்' என்றும், நாசா நிறுவனம் 'Universe' என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'திராவிடம்' என ட்வீட் செய்துள்ளார். இப்படி பிரபலங்கள் தொடங்கி, ட்விட்டர்வாசிகள் வரை பலரும் ஒரு வார்த்தையில் தங்கள் மனதில் படும் விஷயத்தை ட்வீட் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்