"11 ஆயிரம் பேர் தங்கலாம்.. 20 ஆயிரம் டன் வெயிட்டு".. பயன்பாட்டுக்கு வரும் முன்பே சல்லி சல்லியாய் உடைக்கப்பட இருக்கும் பிரம்மாண்ட சொகுசு கப்பல்.!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றான குளோபல் ட்ரீம் 2 தனது முதல் பயணத்திற்கு முன்பே, உடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | "அதுங்க குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி"..எல்லா வீட்டுலயும் நல்ல பாம்பு.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?
பிரம்மாண்ட சொகுசு கப்பல்
புகழ்பெற்ற சொகுசு கப்பலான குளோபல் ட்ரீம்-ஐ நிர்வகிக்கும் அதே நிறுவனம் குளோபல் ட்ரீம் 2 எனப்படும் சொகுசு கப்பலை உருவாக்கி வந்தது. 9,000 பயணிகள் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட இந்த கப்பல், தற்போது ஜெர்மன் கப்பல் கட்டும் தளத்தில் முழுவதும் கட்டிமுடிக்கப்படாத நிலையில் உள்ளது. பிரபல தொழிலதிபர் எம்வி வெர்ஃப்டன்-ஆல் கட்டப்பட்டு வந்த இக்கப்பலை வாங்க யாரும் முன்வராததால் இதில் உள்ள பொருட்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நஷ்டம்
கொரோனா உச்சம் தொட்டிருந்த நிலையில் தொழிலதிபர் எம்வி வெர்ஃப்டன் மிகுந்த பொருளாதர நெருக்கடிகளை சந்திக்கவே, உடனடியாக இந்த கப்பல் விற்பனை செய்யப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இவ்வளவு பிரம்மாண்ட கப்பலை வாங்க யாரும் முன்வராததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்த சொகுசு கப்பல்.
பிரின்க்மேன் & பார்ட்னர் நிறுவனத்தின் ஊழியரான கிறிஸ்டோப் மோர்கன் இதுகுறித்து பேசுகையில்," இந்த கப்பலின் கீல் (keel) மற்றும் லோயர் ஹல் (lower hull) ஆகியவை விற்கப்பட இருக்கின்றன" என்றார். அதேபோல, குளோபல் ட்ரீம் 2 கப்பலின் எஞ்சின் விற்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்குள்
ஜெர்மனியின் விஸ்மர் கப்பல் கட்டும் தளத்தில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பல் தற்போது இருக்கும் இடத்தில் ராணுவ கப்பல்கள் கட்டப்பட இருப்பதால் குளோபல் ட்ரீம் 2 கப்பல் விரைவில் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
80 சதவீதம் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கப்பலில் இருந்து முக்கியமான பொருட்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்பட்ட பின்னர், இறுதியாக கப்பல் ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1,122 அடி நீளமும், 208,000 டன் எடையும் கொண்டிருக்கும் இந்த கப்பலில் உள்ளே தீம் பார்க் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றான குளோபல் ட்ரீம் 2 கப்பல், தனது முதல் பயணத்தை துவங்குவதற்கு முன்னரே, அதன் எஞ்சின் உள்ளிட்ட பொருட்கள் தனித்தனியாக விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | கடலில் மூழ்கிய பிரமாண்ட மிதவை ஹோட்டல்.. 50 வருசம் முன்னாடியே இவ்ளோ பணத்த இழைச்சு கட்டிருக்காங்களா?
மற்ற செய்திகள்