“ஒரு மில்லியன் பேர் எடுத்த திடீர் முடிவு!”.. ஷாக் ஆன நாடு!.. 'இன்னும் என்னலாம் மாறப்போகுதோ!'.. எல்லா புகழும் கொரோனாவுக்கே!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த கொரோனா காலக்கட்டத்தின்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர்.
லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில், ஏப்ரலில் இருந்து ஜூன் இறுதி வரைக்குமான காலகட்டத்தில் தெரியவந்துள்ளது இந்த தகவல். இதன்படி பிரிட்டனைச் சேர்ந்த 1.1 மில்லியன் கணக்கானோர், புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டுள்ளனர்.
மேலும் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் புகைப் பிடிப்பதை கைவிட முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திட்ய இந்த தகவல் தற்போது வைரல் ஆகியுள்ளது. இளைஞர்களை பொறுத்த வரை வீட்டை விட்டு தொலைவில் இருக்கும் போது மதுபான விடுதிகள் செல்பவர்களும், வீட்டுக்கு தெரியாமல் புகை பிடிப்பவர்களும் தற்போது ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே குடும்பத்துடன் இருக்க வேண்டிய சூழல் வந்ததால் புகைப்பிடிப்பதை கைவிட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதே சமயம் புகை பிடிப்போரின் எண்ணிக்கையோ கைவிடப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
மற்ற செய்திகள்