'கொரோனாவால்' அதிகமாக பாதிக்கப்பட்ட 'நாடு...' 'அமெரிக்க இல்லை...' இங்கு 'வேறு விதமாக' 'இறப்பு விகிதம்' இருக்கும்...'எச்சரிக்கும் புள்ளி விவரங்கள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு மக்கள் வைரசால் உயிரிழக்கப்போவதை விட வறுமையால், பட்டினியால் அதிகம் உயிரிழக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

மிகவும் ஏழை மக்களைக் கொண்ட நாடு என்ற நிலையிலிருந்து இந்தியா, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருவதாக உலக வங்கி முன்னர் பாராட்டியிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸால் போடப்பட்ட 2 மாத ஊரடங்கு அத்திட்டத்தை சின்னாபின்னமாக்கியுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார அழிவின் நேரடி விளைவாக 1.2 கோடி இந்திய மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள். அதவாது உலக ஏழைகளில் 5-ல் ஒருவர் இந்தியாவில் இருப்பார்கள் என உலக வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 140 ரூபாய்க்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள் ஆவர்.
கடந்த நாற்பதாண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு பொருளாதாரம் முழுவதும் சுருங்கிப்போகும் என துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மதிப்பீடுகளின்படி, கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 12.2 கோடி இந்தியர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
“வறுமையைத் தணிக்க பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இந்திய அரசாங்கத்தின் பெரும்பாலான முயற்சிகள் ஒரு சில மாதங்களில் தலைகீழாகிவிடும். வைரஸை விட அதிகமான மக்கள் பசியால் இறக்கக்கூடும்.” என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொற்றுநோய் துயரங்களை விட ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார துயரங்கள் அதிகம். இதனால் உள்நாட்டில் 80% க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வருமான வீழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு உதவி கிட்டாமல் போனால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்




