'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்!'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ!.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேஷியாவில் கொரோனா பாதித்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்ட செவிலியரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்!'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ!.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி!’

ALSO READ: அரசியலுக்கு வர வலியுறுத்தி.. 'சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்... தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகர்! மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார்!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். ஒவ்வொரு நாடும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பூசிகளும் இன்னும் முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வந்த பாடில்லை. தற்போது வரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக பார்க்கப்பட்டு வருவது முகக்கவசமும், சமூக இடைவெளியும்தான். 

இதற்கிடையில் பிரிட்டனில் வீரியமடைந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து வீரியமிக்க கொரோனா வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து உலக நாடுகளின் மெல்ல மீண்டு வரும் இந்த நேரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வீரியமிக்க கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

நிலைமை இப்படி இருக்கையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நிகழ்ந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கும் சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

ALSO READ: 'நம்மதாம்ல லேட்டு'!.. இங்கெல்லாம் ஆல்ரெடி புத்தாண்டு பிறந்தாச்சு!... ஆனா ‘கட்டக் கடைசியாக’ புத்தாண்டு பிறக்கப் போவது இவங்களுக்கு தான்!

இந்நிலையில் இருவரும் மருத்துவமனையிலேயே உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடியோ எடுத்த மர்ம நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து ஆபாச படங்கள் தடுப்பு போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.  அப்போது அந்த வீடியோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரையும் நர்ஸையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த இளைஞருக்கு சோதனை நடத்தப்பட்டபோது அவருக்கு அப்போதும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ: 'இது கலக்கல் பரிசு!'.. 'புத்தாண்டின் முதல் நாள் முதல்'... வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஜியோவின் ‘மெகா’ அறிவிப்பு!

அதேநேரம் அந்த நர்ஸுக்கு கொரோனா தொற்று பரவவில்லை. இந்த செய்தி வைரலானதையடுத்து செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உலகமே கொரோனாவுக்கு எதிராக அஞ்சி நடுங்கும் இந்த வேளையில், இந்தோனேஷியாவில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மற்ற செய்திகள்