அஜாக்கிரதை வேண்டாம்..!- அதி வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வைரஸ்..! எச்சரிக்கும் WHO

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வகைகளில் இந்த ஒமைக்ரான் வைரஸ் அதி வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஜாக்கிரதை வேண்டாம்..!- அதி வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வைரஸ்..! எச்சரிக்கும் WHO

உலக நாடுகள் பலவற்றிலும் இன்னும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. மொத்த இதுவரையில் அதிகாரப்பூர்வமாக 77 நாடுகளில் இந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் பல நாடுகளில் உறுதிபடுத்தாவிட்டாலும் நிச்சயம் ஒமைக்ரான் பரவி உள்ளதாக WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து டெட்ரோஸ் கூறுகையில், “ஒமைக்ரான் ஒரு மிதமான பாதிப்பைக் கொடுக்கும் வைரஸ் என நினைத்து பல நாடுகளும் அஜாக்கிரதையாக இருக்கின்றன. ஆனால், ஒமைக்ரான் அதிகப்படியாகப் பரவும் திறன் கொண்டது. மற்ற கொரோனா வகைகளை விட ஒமைக்ரானின் பாதிப்பு உடலில் எந்தளவுக்கு ஏற்படும் என்பது இன்னும் உறுதியாகக் கூற முடியாத நிலை தான் உள்ளது.

ஆனால், இந்த அஜாக்கிரதை மனநிலையைத் தொடர்ந்தால் நிச்சயம் இதனது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். பல நாடுகளும் மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்துவிட்டதாக எண்ணி அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசியை விட மாஸ்க் அணிதல், சமுக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகிய செயல்கள் மட்டுமே இந்தப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழி.

கைகளைக் கழுவுதல், சுத்தமான மாஸ்க் அணிதல், பொது வெளியில் கூட்டங்களில் செல்லாமல் இருத்தால் ஆகிய அனைத்து பாதுகாப்பு விஷயங்களையும் மக்கள் கடைபிடித்தே ஆக வேண்டும்” எனக் கூறியுள்ளார். சில ஆராய்ச்சியாளர்கள் பிஃவைசர், ஆஸ்ட்ராஜெனேகா போன்ற தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் அளவு வீரியம் கொண்டதாக இல்லை என்றும் கூறுகின்றனர்.

OMICRON, CORONA, OMICRON VIRUS, ஒமைக்ரான் வைரஸ், ஒமிக்ரான், கொரோனா பரவல்

மற்ற செய்திகள்