கொரோனாவோட சேர்ந்து 'அந்த' பிரச்சினையும் இருந்துருக்கு... 113 வயசுலயும் 'அசராத' பாட்டி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினை சேர்ந்த 113 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே சிறிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவோட சேர்ந்து 'அந்த' பிரச்சினையும் இருந்துருக்கு... 113 வயசுலயும் 'அசராத' பாட்டி!

1907 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த மரியா என்ற பெண்மணி, சில ஆண்டுகளில் அங்கிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு குடியேறினார். அவருக்கு  மூன்று மகள்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் மரியாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவரது வீட்டிலேயே மரியா தனிமைப்படுத்தப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்பட்டு வந்த தொடர் சிகிட்சையால் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார். இந்த தள்ளாத வயதிலும் கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக குணமடைந்த சம்பவம் இது போன்ற பல முதியவர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது. இதுகுறித்து மரியா கூறுகையில், 'கொரோனா தொற்று எனக்கு எப்படி பரவியது என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது எனது உடல்நலம் சீராக உள்ளது. எனது சிகிட்சைக்கு உதவியாக இருந்த மருத்துவர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

மரியாவின் மகளான ரோசா கூறும்போது, 'எனது அம்மா மிகுந்த மன வலிமையுடைவர். அவருக்கு கொரோனா தொற்று இருந்த போது சிறுநீர் தொற்றும் இருந்தது. ஆனாலும் அவர் மீண்டு விட்டார்' என தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட மூத்த வயது நோயாளி மரியா என்பது குறிப்பிடத்தக்கது.