‘40 வருஷ காத்திருப்பு’.. நொடியில் மாறிய வாழ்க்கை.. முதியவருக்கு அடிச்ச ‘ஜாக்பாட்’!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவருக்கு லாட்டரியில் 1 கோடியே 54 லட்சம் விழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வரும் முதியவர் ஒருவர் கோல்ட் லோட்டோ என்னும் லாட்டரியை கடந்த மே மாதம் 30ம் தேதி வாங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதற்கான லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. அப்போது முதியவர் வாங்கிய எண்ணுக்கு 300,000 ஆஸ்திரேலிய டாலர் பரிசாக விழுந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 54 லட்சம்.
இதுகுறித்து தெரிவித்த முதியவர்,‘இந்த தருணத்துக்காக பல வருஷமாக காத்திருந்தேன். இந்த வரிசை லாட்டரி நம்பரைதான் கடந்த 40 ஆண்டுகளாக வாங்கி வருகிறேன். இது ஆச்சரியமாகதான் இருக்கிறது. நிலவுக்கு மேலே இருக்கிற மாதிரி உள்ளது. இந்த பணத்தில் எங்கள் கனவு வீட்டை வாங்குவோம் என நினைக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்