வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - 78 வயதில் டிப்ளமோ .. 98 வயது தாயிடம் ஆசிபெற்ற மகன்..! வீடியோ

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என்று திருக்குறள் உண்டு. கல்வியின் மேன்மையையும் படித்து பட்டம் பெறும்போது பெற்றோரின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இந்த குறள் இன்றும் உண்மையாய் இருந்து வருகிறது.

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - 78 வயதில் டிப்ளமோ .. 98 வயது தாயிடம் ஆசிபெற்ற மகன்..! வீடியோ

சாதாரணமாக இளமைக் காலத்திலேயே படித்து பட்டம் வாங்கும் பொழுது தங்கள் பிள்ளைகளின் பட்டங்களை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவதுண்டு. ஆனால் கல்விக்கு வயது தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பலரும் காலம் தாழ்ந்தும் படித்து வருகின்றனர். அதற்கு காரணம் குடும்ப சூழ்நிலை, கால சூழ்நிலை உள்ளிட்ட பல காரணங்கள். இத்தகைய காரணங்களால் உரிய வயதில் படிப்பை தொடர முடியாமல் போகிறது பலருக்கு.

அந்த வகையில் 78 வயதில் ஒருவர் படித்துப் பட்டம் வாங்கி இருக்கிறார். ஆம், பட்டம் பெற்ற கையோடு தன்னுடைய தாயை ஓடி வந்து பார்த்து கட்டி அணைத்து உருகுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 78 வயதுடைய குறிப்பிட்ட முதியவர் ஒருவர் தான் படித்துப் பெற்ற பட்டத்துடன் பட்டமளிப்பு விழாவில் சென்று பட்டம் பெற்று, அதே அங்கியுடனும் தொப்பியுடனும் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். வீட்டில் தன்னுடைய 98 வயது தாய் முன்னிலையில் சென்று நின்று தான் பட்டம் பெற்ற மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

வயது மூப்பு காரணமாக மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத அந்த 98 வயது தாய் இந்த வயதிலும் பட்டம் பெற்ற தம்முடைய மகனை நினைத்து பெருமிதம் கொள்கிறார். பட்டம் பெற்ற அந்த முதியவர், கொரோனா ஊரடங்கின்போது, அதாவது தன் 76வது வயதில் நிதி மேலாண்மை குறித்த இளங்கலை பட்டப்படிப்பை படிக்க தொடங்கியதாக தெரிகிறது. சுமார் இரண்டு ஆண்டுகள் படித்து முடித்த அவர் டிப்ளமோ படிப்புக்கான தம்முடைய பட்டத்தை தற்போது பெற்றிருக்கிறார்.

இதேபோல் எத்தனை வயதானாலும் பிள்ளைகளின் அம்மா தங்கள் பிள்ளைகளை குழந்தைகளாகவே பார்க்கின்றனர் என்றும், கல்வி பயில்வதற்கு வயது தடை இல்லை என்பதை அவர் நிரூபித்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் நெகழ்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனர்.

TRENDING

மற்ற செய்திகள்