Viruman Mobiile Logo top

நதி முழுவதும் செத்து மிதக்கும் மீன்கள்.. காரணமானவர்களை கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ 1.5 கோடி சன்மானம்.. கைவிரித்த ஆய்வாளர்கள்.. குழப்பத்துல தவிக்கும் நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனி - போலந்து எல்லையில் உள்ள ஓடர் நதி முழுவதும் ஏராளமான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதக்கின்றன. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் கோடிக்கணக்கில் சன்மானம் அளிக்கப்படும் என போலந்து அரசு தெரிவித்திருக்கிறது.

நதி முழுவதும் செத்து மிதக்கும் மீன்கள்.. காரணமானவர்களை கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ 1.5 கோடி சன்மானம்.. கைவிரித்த ஆய்வாளர்கள்.. குழப்பத்துல தவிக்கும் நாடு..!

Also Read | 'எனக்கென யாரும் இல்லையே'.. இன்ஸ்டாவில் உருட்டித் தள்ளிய இளைஞர்.. உதவி செய்யப்போய் வம்புல மாட்டிக்கிட்ட இளம்பெண்..!

ஓடர் நதி

செக் குடியரசு நாட்டில் உருவாகி பால்டிக் கடலில் கலக்கிறது ஓடர் நதி. இது ஜெர்மனி மற்றும் போலந்து எல்லைகளின் வழியே பயணிக்கிறது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இந்த நதியில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் இரு நாட்டை சேர்ந்த மக்களுமே அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என கண்டறிய ஆய்வாளர்கள் பணியில் இறங்கினர். ஆனால், இந்நேரம் வரையிலும் மீன்கள் இறப்புக்கான காரணம் மர்மமாகவே இருந்து வருகிறது.

Oder River mystery of mass die off of fish as no toxic substances foun

ஆய்வு

இந்த நதியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், நீரில் உப்புத்தன்மை அதிகம் இருந்ததாகவும் ஆனால், மற்றபடி ரசாயனங்களோ நச்சு கிருமிகளோ நீரில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது நிலைமையை மேலும் சிக்கலாக மாற்றியுள்ளது. மீன்கள் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரியாமல் ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய இரண்டு நாடுகளுமே அச்சமடைந்திருக்கின்றன.

ஏனெனில், மீன்கள் இறப்பினால் சுற்றுச்குழலில் ஏற்படும் தாக்கத்தை கணிப்பது சிரமமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும், இது பேரழிவு என்றும் இது ஏற்படுத்தும் தாக்கம் பல ஆண்டுகளுக்கு இருக்கும் எனவும் ஜெர்மனி சுற்றுப்புற சூழல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நதியில் இருந்து இறந்த மீன்களை வெளியேற்றும் பணியில் கடந்த சில நாட்களாக 2,000 போலீஸ் அதிகாரிகள், 300 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 200 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Oder River mystery of mass die off of fish as no toxic substances foun

சன்மானம்

கடந்த வாரம் ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நதி நீரில் பாதரசத்தின் செறிவு அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த கூற்றை போலந்து அரசு மறுத்திருக்கிறது. மேலும், இந்த கொடும் செயலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கொடுத்தால் 180,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாய்) சன்மானமாக அளிக்கப்படும் என போலந்து அரசு அறிவித்திருக்கிறது.

Also Read | 800 கிடா.. 100 மூட்டை அரசி.. ஆண்களுக்கு மட்டும் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்து.. 200 வருஷமா இப்படித்தானாம்..!

RIVER, ODER RIVER, FISH, TOXIC SUBSTANCES

மற்ற செய்திகள்