'6 மணி செய்தி' வாசிப்பாளராக பணியில் சேர்ந்த பெண்! ஒரே நாளில் உலக ஃபேமஸ்.. இதுதான் காரணம்!!!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டில் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்த பெண் ஒருவர் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் வைரலாகியுள்ளார்.
மோக்கோ காவூவே (moko kauae):
பொதுவாக நியூசிலாந்து நாட்டை சேர்ந்த மாவோரி இன பழங்குடி பெண்கள் தங்களின் கீழ்தாடைகளில் 'மோக்கோ காவூவே' (moko kauae) என பச்சை குத்துவத்தை வழக்கமாக வைத்திருப்பர். இதன் காரணமாகவே, நியூஸ் ஹப் லைவ் நிகழ்ச்சியில் 6 மணி செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பெண் ஒருவரே தற்போது வைரல் செய்தியாக மாறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு:
இந்த சம்பவம் செய்தி தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பொதுவாக பழங்குடி மக்கள் மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் பொது சமூகத்திடம் இருந்து விலகியே இருக்கும். இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் உள்ள மாவோரி பழங்குடி இனப்பெண் கைபாராவை செய்தி வாசிப்பாளராக நியமித்து உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மவோரி இனத்தை சேர்ந்தவர்:
கடந்த 2017-ஆம் ஆண்டு கைபாரா பெண்ணின் டி.என்.ஏ. சோதனைகள் மூலம் அவர் முழுமையான மவோரி இனத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. அதன் பின்னரே அவர் மோக்கோ காவூவே பச்சையை உதடுகளிலும் கீழ் தாடையிலும் குத்திக் கொண்டார்.
மோக்கோ காவூவே பச்சை குழந்தையில் இருந்து இளம் வயது பெண்ணாக மாறும் பருவத்தை பறைசாற்றும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
நியூஸ் ஹப் லைவில் பணி:
கடந்த 2019-ம் ஆண்டு டி.வி. என்.இசட் சேனலில் பணியாற்றிய கைபாரா பின் நியூஸ் ஹப் லைவில் பணியாற்ற துவங்கினார். இதுக்குறித்து கூறிய அவர், 'எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை நான் மிகவும் விரும்பி செய்கிறேன். நான் ஊடகத்துறைக்கு வந்த போது இருந்த அழுத்தம் தற்போது இந்த செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் போது இல்லை' எனக் கூறியுள்ளார்.
இரு மொழி செய்தியாளர்:
இரு மொழி செய்தியாளராக இருக்கும் அவர் தன்னுடைய பணி நேரங்களில் தங்களின் இனமொழியான டே ரேவோடு (Te Reo) ஆங்கிலத்திலும் செய்தி வாசிக்கிறார்.
மற்ற செய்திகள்