ஸ்பெய்னில் புதிய நிர்வாண உணவகம் திறக்கப்பட்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் ‘Innato Tenerife’ என்ற பெயரில் புதிய உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்-பெண் மாடல்கள் நிர்வாணமாக உணவுகளை பரிமாறுகின்றனர். இவர்கள் கைகளில் உணவு எடுத்து வந்து கொடுப்பார்கள் என நினைத்து விட வேண்டாம்.
ஆண்-பெண் என இரு மாடல்களில் நிர்வாண உடலில் உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுகளைதான் வாடிக்கையாளர்கள் சாப்பிட வேண்டும். இதனை ‘Orgasmic Atmosphere’ என கூறுகின்றனர்.
உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்றால், அவர் விரும்பும் மாடல் மீது சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் தடவி வைக்கப்பட்டிருக்கும். அதனை வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என சொல்கின்றனர்.
இந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்போன் எடுத்து வர அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி யாரேனும் செல்போன் எடுத்து வந்தால், அதனை வைக்க தனி அறையும் உள்ளது. இந்த உணவகத்துக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு தனித்தனி மூங்கில் அறையில் கொடுக்கப்படுகிறது. அங்கு இவர்களும் உடைகளை கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக உணவருந்தலாம்.
Candle Light Table-லும் உணவுகளும் இங்கு பரிமாறப்படும் கூறுகின்றனர். இதேபோல் உணவுகளின் விலையும் மலைக்க வைக்கிறது. இந்திய மதிப்பில் 10 ஆயிரம், 12 ஆயிரம் என்று அனைத்து உணவுகளின் விலைகளும் உள்ளன. தற்போது இந்த உணவகத்தின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹோட்டல் ரூமில் கிடந்த குக்கர் மூடி.. குற்றாலத்தில் சமையல் மாஸ்டர் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
மற்ற செய்திகள்