என்ன 'வைரஸ்'னே கண்டுபிடிக்க முடியல...! '1,541 பேர்களை தனிமை படுத்தியுள்ளோம்...' 'சீனாவை மேலும் கலங்க வைத்த மர்ம வைரஸ்,...' சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து மீளாத இந்த சூழலில் மீண்டும் 1541 சீன மக்கள் மர்மமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்த செய்தி அனைத்து உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

என்ன 'வைரஸ்'னே கண்டுபிடிக்க முடியல...! '1,541 பேர்களை தனிமை படுத்தியுள்ளோம்...' 'சீனாவை மேலும் கலங்க வைத்த மர்ம வைரஸ்,...' சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவிப்பு...!

உலக மக்கள் அனைவரையும் நடுங்க செய்து வரும் கொரோனா வைரசிற்கே இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் தற்போது மீண்டும் அறிகுறி அற்ற வேறொரு வைரஸ் பரவுவதாக சீனாவின் தேசிய சுகாதார நிலையம் அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள உஹானில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிய கொரோனா வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக எளிதாகவும், வேகமாகவும் பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் அருகில் இருப்பவர்களுக்கு எளிதாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 1,015,474 பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 53,191 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் 212,229 சிகிச்சை பெற்று குணமைடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் கொரோனா தாக்கமே முடிவடையாத சூழலில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாத வகையில் 1,541 பேர் மர்மமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என சீனா அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த நிகழ்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத ஆனால் உயிருடன் வாழும் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட நபர்களின் புள்ளிவிபரங்களை சீன அரசு தயாரித்து வருகிறது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறியற்ற 1,541 நோயாளிகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேருக்கு புதிய பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறியற்ற நபர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

அதையடுத்து சீன அரசு தற்போது 'செரோலாஜிக்கல்' என்னும் பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. 'செரோலாஜிக்கல்' பரிசோதனை என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறாரா? என்பதை அறிய சோதனை செய்யப்படும் ஒருமுறையாகும்.

மேலும் அறிகுறி இல்லாத நோயாளிகளை தற்போது பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி உள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டும் இல்லாமல் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் உடலில் உயிருள்ள கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து சீனாவில் இருந்து வெளிவரும் இந்த திடுக்கிடும் தகவல்கள் உலகநாடுகளை மீண்டும் கலங்கடிக்க செய்து வருகிறது.

VIRUS