‘இந்தியாவுக்கும் சொந்தமல்ல..பாகிஸ்தானுக்கும் அல்ல..காஷ்மீர் காஷ்மீரிகளுடையது’.. அஃப்ரிடி அதிரடி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காஷ்மீர் இந்தியாவுக்கும் அல்ல, பாகிஸ்தானுக்கும் அல்ல, அது காஷ்மீரிகளுகே சொந்தமான ஒன்று என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தியாவுக்கும் சொந்தமல்ல..பாகிஸ்தானுக்கும் அல்ல..காஷ்மீர் காஷ்மீரிகளுடையது’.. அஃப்ரிடி அதிரடி!

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடியின் சுயசரிதை நூல் ஒன்று அண்மையில் வெளியானது. கேம் சேஞ்சர் என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்த சுயசரிதை நூலில் பாகிஸ்தானின் அணிக்காக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாண்டதில் தொடங்கி, இடையில் ஆஃப் த ரெக்கார்டாக இருந்த சர்ச்சைகள் , மனவருத்தங்கள் என பலவற்றையும் கூறியுள்ளார்.

இதே போல், அந்த நூலில் இந்தியா பாகிஸ்தான் இடையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக தற்போதைய பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அப்போதிலிருந்து எடுத்த பல முயற்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் மக்கள் இந்த துணைக்கண்டத்திலேயே யாருமே அனுபவித்திராத துன்பங்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அஃப்ரிடி, காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் சொந்தம் அல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தம் அல்ல, அது காஷ்மீர் மக்களுக்கே உரியது என்று கூறியுள்ளார்.

அதனால் காஷ்மீர் மக்களுக்கு தன்னாலானவற்றை பாகிஸ்தான் பிரதமர் செய்ய வேண்டும் என்றும், அவர்களின் சிக்கல்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து சுமூகமான, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வினை எட்ட வேண்டும்  என்றும் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களைக் காப்பாற்றி அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

KASHMIR, INDIA, PAKISTAN, AFRIDI