பனிப் பாறையில் மோதிய பிரம்மாண்ட சரக்கு கப்பல்.. உலக வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அலாஸ்கா அருகே நார்வே சன் சொகுசு கப்பல் ஒன்று பனிப்பாறையில் மோதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

பனிப் பாறையில் மோதிய பிரம்மாண்ட சரக்கு கப்பல்.. உலக வைரல் வீடியோ..!

Also Read | வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த திண்டுக்கல் இளைஞர்.. வீடுதேடி வந்த கொல்கத்தா காவல்துறை..திகைக்க வைக்கும் பின்னணி.!

வட அமெரிக்காவின் மூலையில் உள்ளது அலாஸ்கா. கடும் குளிர் நிறைந்த பகுதியான இதில், கடல்நீர் ஆங்காங்கே உறைந்து நிற்கும். காவல்துறை அதிகாரிகள் கொடுக்கும் வழிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இந்த பகுதியில் கப்பல்களை இயக்க முடியும். அப்படி, கடந்த சனிக்கிழமை அன்று இப்பகுதியில் பயணித்த நார்வே சன் என்னும் சொகுசு கப்பல் ஒன்று பனிப் பாறையில் மோதியிருக்கிறது. இதனால் கப்பலின் கீழ் பகுதி சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் துறைமுகத்திற்கு

அமெரிக்க கடலோர காவல்படையின் (USCG) அறிக்கையின்படி, கடந்த சனிக்கிழமை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பழுதடைந்த பாகங்களை சரிசெய்ய சியாட்டில் நகரத்திற்கு இந்த கப்பல் செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலின் வலது பக்கத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் சியாட்டிலில் உள்ள துறைமுகத்திற்கு இந்த கப்பல் பயணித்ததுவருவதாகவும் கடலோரக் காவல்படைத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Norwegian Cruise Ship Smashes Into Iceberg In Alaska

இந்த விபத்தினால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என  அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இந்த கப்பலின் செய்தித் தொடர்பாளர்,"அலாஸ்காவில் உள்ள ஹப்பார்ட் பனிப்பாறையை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தபோது பனிப்பாறையில் (growler) கப்பல் மோதியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரல் வீடியோ

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு மேல் உயரம் மற்றும் 98 முதல் 164 அடி தடிமனாக இருக்கும் பனிப்பாறைகளை iceberg என்றும், அதற்கும் குறைவான அளவுடைய பனிப்பாறைகளை "growlers" அல்லது "bergy bits" என்றும் வகைப்படுத்தியுள்ளது. ஆகவே, நார்வே சன் கப்பலில் மோதியது ஒரு சிறிய ரக growlers தான் என்றும் இதனால் கப்பலுக்கு ஆபத்தான அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கப்பல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், பனிப்பாறையில் நார்வே சன் கப்பல் மோதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "முதல் தடவை அவருக்கு ஒரு பைக் கொடுத்தோம்.. அவ்வளவுதான்.. எங்க போனாருன்னே தெர்ல".. தோனி குறித்து நெகிழ்ந்து பேசிய CSK உரிமையாளர் ஸ்ரீனிவாசன்..!

 

ALASKA, NORWEGIAN CRUISE SHIP, ICEBERG

மற்ற செய்திகள்