வணக்கம் தமிழ் மக்களே.. பொங்கல் அன்று ஒரே ட்வீட்.. நெகிழ வைத்த அமெரிக்க செனட்டர்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு கலிபோர்னியா மாகணத்தின் செனட்டருமான வைலி நிக்கேல் வாழ்த்துகள் கூறி தமிழக மக்களை அங்கீகரித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை உழவர்களுக்கான திருநாள். இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. அதிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
பண்டிகைகளுக்கு முக்கியத்துவம்:
கடந்த இரு வருடங்களாக கொரோனா வைரஸ் உலகை முடக்கி போட்டுள்ள நிலையில், பண்டிகைகளுக்கு அரசு சார்பில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஆனாலும் வழக்கம் போல் மக்கள் பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதற்காக உழவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வரும். ஆனால் நோய் காலம் என்பதால் கரும்பு உட்பட விவாசாயப் பொருட்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
உலக நாடுகளில் கொண்டாடப்படும் பொங்கல்:
மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது. இந்தியாவைத் தாண்டி இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க தமிழர்களுக்கு வாழ்த்து:
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஊழியரும், வடக்கு கலிபோர்னியா மாகணத்தின் செனட்டருமான வைலி நிக்கேல் அமெரிக்க தமிழர்களை அங்கீகரித்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
5,000 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் விழா:
அதில். "இன்று தைப் பொங்கல் கொண்டாடும் தமிழ் சமூகத்திற்கு வணக்கங்கள்! இந்த அறுவடை திருவிழா 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள தமிழர்களினால் கொண்டாடப்பட்டு வருகிறது, வட கலிபோர்னியாவிலும், அமெரிக்காவை சுற்றி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையையும், உலகின் பெரிய சமூகத்தையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
உங்கள் மகிழ்சிகள் பெருக வாழ்த்துக்கள்!" என்று பகிர்ந்துள்ளார். இதனால் அமெரிக்க தமிழர்கள் உற்சாகம் அடைந்து பண்டிகையை வெகு சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.
Vannakkam to the Tamil community celebrating Thai Pongal today! This multi-day harvest festival has been celebrated for over 5,000 years by many faiths worldwide. Today, we recognize the large Tamil community here in North Carolina and around the U.S.
Wishing you many joys!
— Senator Wiley Nickel (@wileynickel) January 14, 2022
மற்ற செய்திகள்