“மயில்வாகனம் கேட்டை மூடுறா!”.. வடகொரியாவில் கொரோனா அறிகுறியுடன் முதல் நபர்.. ‘கிம்’ எடுத்த ‘பரபரப்பு முடிவு!’.. அதிகாரிகளுக்கு ஆப்பா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனாவினால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்குள்ளான நிலையில், வடகொரியாவில் மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது உலக மருத்து வல்லுநர்கள் மற்றும் உலக நாடுகளின் வியப்புக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

“மயில்வாகனம் கேட்டை மூடுறா!”.. வடகொரியாவில் கொரோனா அறிகுறியுடன் முதல் நபர்.. ‘கிம்’ எடுத்த ‘பரபரப்பு முடிவு!’.. அதிகாரிகளுக்கு ஆப்பா?

ஏறக்குறைய 2 லட்சம் மக்கள் வசிக்கும் வடகொரியாவின் எல்லைப்பகுதியான கேசாங்கில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்ததுடன், முழு ஊரடங்கு பிறப்பித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இதுவரை வடகொரியாவில் ஒரு கொரோனா நோயாளி கூட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில், தற்போது கொரோனா அறிகுறிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரே வடகொரியாவின் முதல் கொரோனா நோயாளி ஆவார்.

இதுகுறித்து கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்ட செய்தியறிக்கையில், “பல ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவுக்கு தப்பிச் சென்று, கடந்த வாரத்தில் மீண்டும் சட்ட விரோதமாக வடகொரியாவின் கேசாங் நகருக்குள் நுழைந்து வசித்து வரும் ஒருவருக்கு ரத்தப்பரிசோதனை செய்ததில் திடீரென கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இதனால் கேசாங் நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்நகரின் எல்லைகள் அனைத்தும் மூடி சீல் வைக்க அதிபர் கிம் ஜாங் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை மருத்துவக்கட்டமைப்பு மிகவும் மோசமான உள்ளதாலும்,  போதுமான மருந்துகள் மருத்துவமனைக்கு சப்ளை செய்யப்படாததால், கொரோனா பாதிப்புஏற்பட்டால் வடகொரிய மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளதால், இவ்வாறான அதிரடி முடிவுகளை வடகொரியா எடுத்துவருவதாக உலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, தென்கொரியாவிலிருந்து ஒருவர் எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் அளவுக்கு பாதுகாப்பு கவனக்குறைவாக இருந்துள்ளதா? இது எப்படி நடந்தது என்று அதிபர் கிம் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இதை கவனிக்காத அதிகாரிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற செய்திகள்