‘முன்னாடி பார்த்த மாதிரி இல்ல’!.. 4 மாசத்தில் ஏற்பட்ட ‘திடீர்’ மாற்றம்.. என்ன காரணம்..? சோகத்தில் வடகொரிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் திடீரென எடை குறைந்து பொதுவெளியில் காணப்பட்டது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘முன்னாடி பார்த்த மாதிரி இல்ல’!.. 4 மாசத்தில் ஏற்பட்ட ‘திடீர்’ மாற்றம்.. என்ன காரணம்..? சோகத்தில் வடகொரிய மக்கள்..!

தொழில்நுட்பம் உட்சபட்ச வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலத்திலும், வடகொரியா மர்ம தேசமாகவே இருந்து வருகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம், ஆட்சிக் கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட எந்த தகவலும் அவ்வளவு எளிதாக வெளியுலகுக்கு தெரிந்துவிடாது. அதற்கு காரணம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong-un) தலைமையிலான ராணுவ ஆட்சியின் கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும்தான் எனக் கூறப்படுகிறது.

North Koreans worry over Kim Jong Un's weight loss, state media says

இந்த சூழலில் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இவர் கடைசியாக பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சுமார் 4 மாதங்கள் வரை எவ்வித நிகழ்ச்சியிலும் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

North Koreans worry over Kim Jong Un's weight loss, state media says

சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அதிபர் கிம் ஜாங் உன், கடந்த ஜூன் 6-ம் தேதி முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரை கண்ட பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், கிம் ஜாங் உன் கணிசமாக உடல் எடை குறைந்து காணப்பட்டார். பழைய படங்களுடன் அவரது தற்போதைய படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிந்தது. அவரது உடல் எடை இழப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

North Koreans worry over Kim Jong Un's weight loss, state media says

இந்த நிலையில் கிம் ஜாங் உன்னின் எடை இழப்பு விவகாரம் வடகொரியா நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிபரின் எடை இழப்பு குறித்து வட கொரியா மக்கள் மனமுடைந்து போயுள்ளதாகவும், தங்களுக்கு இது கண்ணீர் வரவழைப்பதாகவும், பியோங்யாங் நகரவாசி ஒருவர் ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார்.

News Credits: Reuters

மற்ற செய்திகள்