வட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா?... இல்லை சொந்த தங்கையா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அடுத்ததாக அங்கு ஆட்சியை நடத்தப்போவது யார்? என்ற விவாதங்கள் சர்வதேச அரங்கில் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன.

வட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா?... இல்லை சொந்த தங்கையா?

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் திணறித்தவித்து கொண்டிருக்கும் இந்த நிலையிலும் அமெரிக்கா தொடர்ந்து வட கொரியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக கிம்முக்கு தற்போது இதயத்தில் அறுவைசிகிச்சை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2 வாரங்களாக அவர் வெளியில் தலை காட்டாததால் கொரோனா களேபரங்களுக்கு மத்தியிலும் வட கொரியா மீது உலக நாடுகள் கவனம் செலுத்த  ஆரம்பித்து இருக்கின்றன.

இதற்கிடையில் கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அடுத்ததாக வட கொரியாவை ஆளப்போவது அவரது காதல் மனைவியா? அல்லது பாசத்துக்கு உரிய தங்கையா? என்ற விவாதங்கள் சர்வதேச அரங்கில் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. கிம்மின் மனைவி பெயர் ரி சோல் ஜு. பொது நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து பிடித்துப்போய் கிம் அவரை திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

மறுபுறம் கிம்மின் சகோதரி பெயர் கிம் யோ ஜாங். இருவரும் ஒன்றாக சுவிட்சர்லாந்தில் படித்தவர்கள். தந்தை இறப்பிற்கு பின் அண்ணனுக்கு அவ்வப்போது ஆலோசனை சொல்லி அவரை வழிநடத்துவது இவர் தானாம். வட கொரியாவைப் பொறுத்தவரை ஆணாதிக்கம் பிடித்த நாடு. அங்கு வீட்டிலும் சரி பொது வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை கிடையாது. இதன் காரணமாகவே ரி குறித்தோ மற்றும் தங்கை யோ குறித்தோ இதுவரை எந்த பெரிய தகவலும் வெளியுலகுக்குக் கசிந்ததில்லை.

இதனால் தற்போது ரி எங்கிருக்கிறார்? கிம்மின் உடல்நிலை எந்தளவில் உள்ளது? யோவின் நிலை என்ன? போன்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. எனினும் விரைவில் கிம்மின் உடல்நிலை குறித்து, வடகொரியா அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.