உலகமே கொரோனாவால் நடுங்கிட்டு இருக்கும்போது திடீரென ‘வட கொரியா’ வெளியிட்ட அறிக்கை.. ஆச்சரியத்தில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தங்கள் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் சீனாவின் பொருளாதார நட்பு நாடான வட கொரியாவிலும் கொரோனா தொற்று அதிகமாக பரவி இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்புக்கான வடகொரிய பிரதிநிதி எட்வின் சால்வடோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட 23 ஆயிரம் பேரை பரிசோதித்ததாகவும், அதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் எட்வின் சால்வடோர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியைத் தவிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிள்ளார். கடந்த மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சகத்தில் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலை வட கொரியா தங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலால் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், வட கொரியாவில் கொரோனா பரவல் இல்லை என்ற அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்