'என் கண்ணையே நம்ப முடியல'... 'சத்தியமா சொல்லு அவர் தானா'?... 'அதிர்ச்சியிலிருந்து மீளாத உலக நாடுகள்'... 'இணையத்தை கலங்கடித்த புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்உண்மையிலேயே அவர் கிம் ஜாங் உன் தானா என்பது தான் பல இணைய வாசிகளின் கேள்வியாக உள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் விஷயம் அவரது சர்வாதிகாரம். அதன்பிறகு பலருக்கும் நினைவுக்கு வருவது அவரது முகம் மற்றும் கிம் ஜாங் உன்னின் சிகை அலங்காரம். பெரும் சர்வாதிகாரியாக அறியப்படும் கிம் ஜாங் உன்னின் முகத்தைப் பார்த்தால் இவரா அந்த சர்வாதிகாரி எனக் கேட்கத் தோன்றும் அளவிற்கு அவரது முகத்தோற்றம் இருக்கும்.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றது முதல், கிம் ஜாங் உன் உடல் எடை, தொடர்ந்து அதிகரித்து வந்தது. உடல் பருமன் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் கிம் ஜாங் உன்யின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் வெளி உலகத்திற்குத் தெரியவரவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிம் ஜாங் உன்னின் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் கிம் ஜாங் உன் மிகவும் சோர்வுடன், உடல்நிலை சரியில்லாதவர் போலத் தோற்றமளித்தார். இதனால் அவர் அதிபர் பதவியிலிருந்து விலகப் போகிறார் என்ற பேச்சு கூட ஓடியது. ஆனால் தற்போது அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இரவு நடந்த இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட கிம் ஜாங் உன், தனது எடையைக் குறைத்து ஸ்லிம்மாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தோன்றினார்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிம் ஜாங் உன் தனது உடல் எடையைக் குறைத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், பலரும் இது உலக நாடுகளுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும் எனவும், கிம் ஜாங் உன் குறித்துத் தொடர்ந்து வதந்தி பரப்பி வந்த நபர்களுக்கு இனி வேலை இருக்காது எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.
It's striking how much healthier Kim Jong Un is looking in these photos from yesterday. However he is doing it -- and there are theories -- he looks a lot better than he did a few months ago. pic.twitter.com/DKqCOFSBF8
— Martyn Williams (@martyn_williams) September 9, 2021
The Pyongyang parade appears to have started with lots of soldiers and finished with lots of civilians. The military hardware in the middle doesn't look like it was anything more exciting that tractors, fire trucks and the like. pic.twitter.com/gyxBOSMvjB
— Martyn Williams (@martyn_williams) September 9, 2021
மற்ற செய்திகள்