"இனிமே போருக்கு எல்லாம் போகமாட்டோம்னு சொன்னீங்க"... இப்போ என்னடான்னு பாத்தா... 'வடகொரியா' குறித்து 'ஐ.நா' வெளியிட்ட அதிர்ச்சி 'தகவல்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்ததால் அந்த நாட்டின் மீது ஐ.நா கடுமையான பொருளாதார தடைகளை சில ஆண்டுகளுக்கு முன் விதித்திருந்தது.
இதனை ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவும் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என வடகொரியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இனி எந்த நாட்டுடனும் போர் கிடையாது என அறிவித்திருந்தார். தங்களது நாட்டின் பாதுகாப்பை அணு ஆயுதங்கள் உறுதி செய்வதால் இனி போருக்கான தேவையில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, வடகொரியா அணு ஆயுத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தற்போது தகவலை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை மூலம் இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஏவுகணைகளில் பொருத்தும் வகையில் சிறிய ரக அணு ஆயுத கருவிகளை வடகொரியா தயார் செய்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்