வட கொரிய அதிபர் Kim Jong Un உடல்நிலை பற்றி சகோதரி பரபரப்பு தகவல்.. "திரும்பவும் இப்படி நடந்துச்சா??"
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று பரவல், உருமாறியும் பல உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், வட கொரியா நாட்டிலும் கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அங்கே ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டில் வேகமாக கொரோனா தொற்று பரவியதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டது.
லட்சக்கணக்கான மக்கள், வட கொரியா நாட்டில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், நூற்றுக்கும் குறைவான மக்கள் மட்டும் தான் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தியது தொடர்பாக பேசி இருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கொரோனாவுக்கு எதிரான போரில் வட கொரியா வெற்றி பெற்றதாகவும், நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார். மேலும், இதற்கு காரணமானவர்களை பாராட்டுவதாகவும் அவர் கூறி இருந்தார்.
தொடர்ந்து பேசிய கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங், "வட கொரியாவில் கொரோனா தொற்று பரவலின் போது, அதிபர் கிம் ஜாங் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்கவில்லை. நாட்டு மக்களை பற்றி சிந்தித்து கொண்டிருந்ததால், அவர்களையே பார்த்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது" என கூறினார். அதே போல, வட கொரியாவில் கொரோனா தொற்று பரவியதற்கு தென் கொரியா தான் காரணம் என்றும், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரிக்கை ஒன்றையும் கிம் யோ ஜாங் விடுத்துள்ளார்.
இதனிடையே, கடந்த மாதம் 17 நாட்களாக மக்கள் முன் கிம் ஜாங் உன் தோன்றவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, கிம் ஜாங் உன்னின் குடும்பத்தினருக்கு இதய நோய் வரலாறு இருப்பதால், அவரது உடல்நிலை குறித்து சந்தேகங்களும் எழுந்துள்ளது. முன்னதாக, இதே போல ஒரு முறை கிம் ஜாங் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், கிம் ஜாங் உன்னிற்கு கொரோனா பேரிடர் காலத்தில், அதிக காய்ச்சல் இருந்ததாக அவரது சகோதரி குறிப்பிட்ட விஷயம், நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.
அது மட்டுமில்லாமல், சுகாதார வசதிகள் மோசமாக உள்ள நாடுகளில் ஒன்றான வட கொரியாவில், லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பிறகும், நூறு பேர் கூட உயிரிழக்கவில்லை என்ற அந்த நாட்டின் அறிக்கை, உலகளவில் உள்ள நிபுணர்கள் மத்தியில் சந்தேகத்தை தான் உருவாக்கி உள்ளது.
மற்ற செய்திகள்