"கொரோனா மாதிரியே இன்னொரு நோய் பரவுது".. வட கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத நோய்.. பரபரப்பில் உலகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியாவில் கொரோனா போலவே மற்றொரு நோய் பரவல் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத வட கொரியாவில் தற்போது புதிதாக ஒரு நோய் பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா தொற்றால் உலகமே பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் நிலையில், புதிதாக ஒரு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசு தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய நோய்
வட கொரியாவின் தென்மேற்கு நகரான ஹேஜு-வில் இந்த நோய்த்தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனை பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து கொரிய மத்திய பத்திரிக்கை முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வட கொரியாவின் தென்மேற்கு ஹெஜு நகரில் ஒரு கடுமையான குடல் தொற்றுநோய் பரவி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,"கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் கிம் ஜாங் உன், ஜூன் 15 அன்று தென் ஹ்வாங்ஹே மாகாணத்தின் கொரிய தொழிலாளர் கட்சியின் ஹேஜு நகரக் குழுவிற்கு தனது குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை அனுப்பினார்" எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முழு கவனம் தேவை
இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனடியாக தனது இந்நோய் குறித்து ஆராய்ச்சிகளை முடுக்கிவிடவும், இந்த நோய் தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும் சுகாதார துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் மேலும், நோய் பரவலை தடுக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்படியும் வலியுறுத்தியுள்ளார் கிம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரிய அதிகாரிகள், "குடிநீர் மூலங்களில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகளால் இந்த நோய் ஏற்பட்டிருக்கலாம். இது காலரா அல்லது மலேரியாவாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளனர். வட கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,010 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்