'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தடைகளை மீறி சட்டவிரோத ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு பயன்படுத்தப்பட்ட வடகொரியாவின் 14 கப்பல்களை கருப்பு பட்டியலில் வைக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'

உலகம் நாடுகள் கொரோனா வைரஸ் பரவலால் நிலைகுலைந்து போயுள்ளன. வல்லரசு நாடுகள் பலவும் பல ஆயிரம் பேரை பலி கொடுத்துவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. கடந்த 2 மாதங்களில் உலகப் பொருளாதாரம் பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது. வைரஸ் தாக்குதலால் பலியாவோரின் எண்ணிக்கை பதறச் செய்யும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆயுதங்களுக்கு செலவு செய்வதை நிறுத்திவிட்டு நாடுகள் அனைத்தும் மருத்துவம் மற்றம் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஏராளமான நிதியை செலவழித்து வருகின்றன.

இந்த சூழலில் வடகொரியா மட்டும், சர்வதேச நாடுகளின் விதிகளை மதிக்காமல் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நாடு ஐ.நா., மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.