LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

"10 செகண்ட்ல எல்லாம் முடிஞ்சிடும்"..100 மீ தொலைவுல இருந்து தகர்க்கப்படும் இரட்டை கோபுரங்கள்.. நிபுணர்கள் சொல்லிய அதிரவைக்கும் தகவல்கள்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நொய்டாவில் உள்ள இரட்டை கோபுரம் ஒன்று வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி தகர்க்கப்பட இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

"10 செகண்ட்ல எல்லாம் முடிஞ்சிடும்"..100 மீ தொலைவுல இருந்து தகர்க்கப்படும் இரட்டை கோபுரங்கள்.. நிபுணர்கள் சொல்லிய அதிரவைக்கும் தகவல்கள்.!

Also Read | ஆளே இல்லாத தீவு.. ஆனா Hi Tech வசதிகள்.. சுற்றுலாவாசிகளை சுண்டி இழுக்கும் குட்டித்தீவு..!

இரட்டை கோபுரம்

நொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருக்கும் இந்த சூப்பர் டெக் இரட்டை கட்டிம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என இந்த கட்டிட உரிமையாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Noida Super Tech twin towers with explosives completed

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் டெக் இரட்டை கட்டிடத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி வெளிவந்த தீர்ப்பில், '3 மாதங்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி இந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

3700 கிலோ வெடிபொருட்கள்

இந்நிலையில், இந்த இரட்டை டவரில் உயரமான கட்டிடத்தில் வெடிபொருட்கள் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது. இதில் 90 பணியாளர்கள் இந்தியாவை சேர்ந்த 10 வெடிமருந்து நிபுணர்கள், வெளிநாடுகளை சேர்ந்த 7 நிபுணர்கள் இன்று பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக 9,640 துளைகள் இடப்பட்டு 3700 வெடிமருந்துகள் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. நாளை இந்த கட்டிடத்தில் உள்ள அறைகளுக்கிடையே இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.

Noida Super Tech twin towers with explosives completed

இங்குள்ள உயரமான கட்டிடத்தில் 32 தளங்களும், அடுத்த கட்டிடத்தில் 29 தளங்களும் அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி. ஆகஸ்டு 28 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து பேசிய கட்டிட தகர்ப்பு பணியினை மேற்கொள்ளும் Edifice நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மயூர் மேத்தா,"வெடிபொருட்களை நிரப்பும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. 100 மீட்டர் தொலைவில் இருந்து இந்த கட்டிடங்கள் வெடிக்கச் செய்யப்படும். வெடிபொருட்கள் வெடித்து சிதற 10 வினாடிகள் ஆகும். அடுத்த 5 வினாடிகளில் மொத்த கட்டிடங்களும் பாகங்களாக கீழே உதிர்ந்துவிடும்" என்றார்.

Also Read | 75 வருஷதுக்கு முன்னாடி பிரிஞ்சுபோன 2 குடும்பம்.. ஒரே வீடியோவால் நடந்த அற்புதம்.. நெகிழ வச்ச பின்னணி..!

NOIDA, TWIN TOWERS, TWIN TOWER EXPLOSION, NOIDA SUPER TECH TWIN TOWERS, SUPER TECH TWIN TOWERS DEMOLITION

மற்ற செய்திகள்