'10 வருஷம் ஆச்சு'.. இப்படி போச்சுனா.. எதிர்காலத்துல பெண்கள் முரட்டு சிங்கிள்ஸ் ஆகிவிடுவார்கள்.. தவிக்கும் கிராமம்!
முகப்பு > செய்திகள் > உலகம்போலந்தில் 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காத கிராமம், உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.
போலந்து நாட்டில் உள்ளது மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ என்கிற அபூர்வ கிராமம். மிக சமீபத்தில் வட இந்தியாவின் ஒரு கிராமத்தில் பெண் குழந்தையே பிறக்கவில்லை என வெளியான தகவல் பெரும் ஆச்சர்யத்தைத் தந்ததை அடுத்து, போலந்தின் இந்த கிராமத்தில் ஆண் குழந்தை பிறக்காததால் உலக நாடுகள் பலவும் ஆச்சர்யம் அடைந்துள்ளன.
கடந்த 2017-ஆம் வருடம் போலந்து நாட்டில், 96 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு நிகராக, சராசரியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஆண் குழந்தைகள் இருந்ததாக புள்ளி விவரங்க இருக்கும் நிலையில், அந்த கிராமத்தில் கடைசியாக பிறந்த சுமார் 12 குழந்தைகளுமே பெண் குழந்தைகளாக இருந்துள்ளனர்.
தவிர, கிராமத்தின் சூழல், மரபணு தொடர்ச்சி என பலவிதமான காரணிகளும், இவ்வாறு ஆண் குழந்தைகள் பிறக்காததற்குக் காரணமாக இருக்கலாம் என்கிற கருத்தினை உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த ஊர் பெண்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் முதலான பலவற்றையும் முயற்சித்து வந்தும், ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை என வருந்துகின்றனர்.