'கிம் இறந்துட்டார்!' .. 'கோமாவில் இருக்கிறார்!'.. 'சகோதரி மாயம்!'.. வதந்திகளை சுக்கு நூறாக்கி 'மாஸ் எண்ட்ரி'!.. என்னதான் நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்தீவிர மன அழுத்தம் காரணமாக வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்ததாகவும், கிம் கோமா நிலையில் இருப்பதாகவும் முதலில் யூகங்கள் வெளியாகின.
இதனிடையே கிம்மின் சகோதரி அச்சம் காரணமாக மாயமாகியிருக்கலாம் என்றும் கருதப்பட்டது. அதன் பின்னர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாட்டில் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் கலந்து கொண்டு, இறப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இதையடுத்து தற்போது அந்த ஊகம் மீண்டும் எழுந்துள்ளது.
ஆம், கடந்த இரு தினங்களுக்கு மேலாக மழையும் பலத்த காற்றும் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் அளவுக்கு சூறாவளி புரட்டியெடுக்கும் சூழலில் கிம் ஜாங் உன் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஆனாலும் கிம் ஜாங் விவசாயிகளுடன் மாஸ்க் ஏதும் அணியாமலே உரையாடுவதாகவும், நோயாளி போல் இல்லாமல் சுறுசுறுப்பாகவே காணப்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் 10 நாட்களுக்கு முன்னரே, தென் கொரிய உளவு அமைப்பு, கிம் ஜாங் ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார் என்றும் ஆட்சி அதிகாரங்களை தமது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டார் என்றும் வெளியிட்ட தகவல்களை இந்த புகைப்படங்கள் பொய்யாக்கியுள்ளன.
அத்துடன், கிம்மின் சகோதரி, அண்மை காலமாக நாட்களில் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளை வடகொரியா சார்பில் வகுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் வேலை தொடர்பான மன அழுத்தம் காரணமாகவே பொது வெளியில் தோன்றாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்