‘எனக்கு கொரோனா இருக்கு!’.. போலீஸாரின் மீது எச்சில் துப்பிய இளைஞர்.. கவலை தெரிவித்த உயர்காவல் அதிகாரி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூஸிலாந்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

‘எனக்கு கொரோனா இருக்கு!’.. போலீஸாரின் மீது எச்சில் துப்பிய இளைஞர்.. கவலை தெரிவித்த உயர்காவல் அதிகாரி!

இந்நிலையில் ஆக்லாந்தில் உள்ள வெயிட்மேட் எனும் பகுதியில் 30 வயது இளைஞர் ஒருவரை மற்றொரு புகாரின்பேரில், காவலர்கள் கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.  ஆனால் அந்த இளைஞரோ, தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறி காவலர்களை தாக்கியதோடு, அவர்களின் முகத்தில் எச்சில் துப்பி அவமரியாதை செய்துள்ளார்.  அதன் பின் அந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் காவலர்கள் அந்த இளைஞரைக் கைது செய்தனர். காவல்துறையினரைச் சேர்ந்த சிலரும் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் நைலா ஹசன் பேசுகையில்,  குற்றம் சாட்டப்பட்ட நபர் அதிகாரிகளின் உடல்நலம் பற்றியும் பாதுகாப்பு குறித்தும் கவலையை உண்டாக்கியதோடு, அவர் செய்தது தனக்கு திகைப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதாகவும், அதிகாரிகளின் மீது துப்புவது ஏற்க முடியாதது என்றும் பரிசோதனையின் முடிவுகள் வரும் வரை அவரைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் தனிமையிலேயே இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

CORONA, CORONAVIRUS, POLICE, NEWZEALAND